×

உக்ரைன் மீது 70க்கும் மேற்பட்ட ட்ரோன் தாக்குதல் ஐந்து பேர் காயம்

 

உக்ரைன் ரஷ்யா இடையிலான போர் நடவடிக்கை கடந்த ஆண்டு பிப்ரவரி 24ம் தேதி தொடங்கிய நிலையில், இந்த போர் நடவடிக்கை 2வது ஆண்டை நெருங்கி உள்ளது. இந்த போர் தாக்குதலில் லட்சக்கணக்கான ராணுவ வீரர்கள் மற்றும் பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளனர். மில்லியன் கணக்கான மக்கள் தங்கள் வாழ்வாதாரத்தை இழந்துள்ளனர். கடந்த சில மாதங்களாக இரு நாடுகளுக்கும் இடையில் சண்டை சற்று குறைந்துள்ள நிலையில் அவ்வப்போது ஏவுகணை தாக்குதல்நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், ரஷ்யா நேற்று ஒரே இரவில் கிய்வ் மீது 70க்கும் மேற்பட்ட ட்ரோன்களை கொண்டு தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதலில் ஐந்து பேர் காயமடைந்தனர். இது இதுவரை நடந்த போரில் இது தான் மிகப்பெரிய ட்ரோன் தாக்குதல் என்று உக்ரைன் அதிகாரிகள் தெரிவித்தனர். உக்ரைனில் ஏவப்பட்ட 75 ஆளில்லா விமானங்களில் 71 சுட்டு வீழ்த்தப்பட்டதாக விமானப்படைத் தலைவர் மைகோலா ஓலெசுக் தெரிவித்தார்.

இந்த தாக்குதலில் 11 வயது சிறுமி உட்பட ஐந்து பேர் காயமடைந்ததாகவும், கீழே விழுந்த ட்ரோனின் துண்டுகள் குழந்தைகள் நர்சரியில் தீப்பிடித்ததாக அவர் கூறினார். இந்தத் தாக்குதலால் தலைநகரில் உள்ள 77 குடியிருப்புகள் உட்பட கிட்டத்தட்ட 200 கட்டிடங்களுக்கு மின்சாரம் துண்டிக்கப்பட்டதாகக் கூறினார்.

The post உக்ரைன் மீது 70க்கும் மேற்பட்ட ட்ரோன் தாக்குதல் ஐந்து பேர் காயம் appeared first on Dinakaran.

Tags : Ukraine ,Russia ,Dinakaran ,
× RELATED ரஷ்ய மின்நிலையங்கள் மீது உக்ரைன்...