×

சென்னையில் நாய்களுக்கு ரேபிஸ் தடுப்பூசி போடும் பணிகள் தீவிரம்: தெரு நாய்களின் தொல்லைகளை கட்டுப்படுத்த மாநகராட்சி நடவடிக்கை

சென்னை: சென்னை ராயபுரத்தில் ஒரு மணி நேரத்தில் 27 பேரை வெறிநாய்கடித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. செல்ல பிராணிகளான நாய்களை ஆசையாக வளர்ப்பது பலருக்கு விருப்பமான ஒன்று அனால் சமீபத்தில் சுற்றி திரியும் நாய்கள் பொதுமக்களை அச்சுறுத்தி வருவதாக புகார் எழுந்துள்ளது. ராயபுரத்தில் நடைபெற்ற சம்பவம் அதற்கு சான்று, மாநகராட்சியின் ஆய்வின்படி சென்னையில் சுமார் 90,000 தெருநாய்கள் உள்ளன. அவற்றின் தொல்லைகளை கட்டுப்படுத்தும் நடவடிக்கையும் துரிதப்படுத்தப்பட்டுள்ளது. சென்னை மாநகராட்சி முழுவதும் 16 நாய்பிடி வாகனங்கள் மூலம் தலா 5 பணியாளர்களை கொண்டு தெருக்களில் சுற்றி திரியும் நாய்களை பிடித்து வெறிநாய்கடி நோய் தடுப்பூசி பூட்டு வருகிறது.

கடந்த ஆண்டு 16 ஆயிரம் நாய்களுக்கும், நடப்பாண்டில் இதுவரை 17,813 நாய்களுக்கு ரேபிஸ் தடுப்பூசி போடப்பட்டுள்ளது.  அதில் 13,486 கருத்தடை சிகிச்சைகளும் நடக்கும் என்றார் மாநகராட்சி கால்நடைப்பிரிவு அதிகாரி கமால் உசேன். சாலையில் சுற்றி திரியும் அனைத்து நாய்களுமே அபாயமானது இல்லை என்கின்றனர் கால்நடை மருத்துவர்கள். சாலையில் நாய்களை கண்டால் அதை விரட்டாமலோ, துன்புறுத்தாமலோ கடந்து சென்றால் போதும் என கூறும் மருத்துவர்கள் நாய் கடித்தால் உடனடியாக மருத்துவரை அணுகி தடுப்பூசி எடுத்துக்கொண்டால் ரேபிஸ் தொடரிலிருந்து தற்காத்து கொள்ளலாம் என அறிவுறுத்துகின்றனர். நாய்களுக்கு தெருவில் உணவு வைக்கும் பொதுமக்கள் அவற்றை தத்தெடுத்து முறையாக வீட்டில் வளர்க்க முன்வர வேண்டும் என செல்ல பிராணி ஆர்வலர்கள் வலியுறுத்துகின்றனர். அதன் மூலம் வீட்டிற்கு ஒரு காவலாளி கிடைப்பதுடன் சில அசம்பாவிதங்களையும் தவிர்க்க முடியும் என விலங்கு நல ஆர்வலர்கள் யோசனை கூறுகின்றனர்.

The post சென்னையில் நாய்களுக்கு ரேபிஸ் தடுப்பூசி போடும் பணிகள் தீவிரம்: தெரு நாய்களின் தொல்லைகளை கட்டுப்படுத்த மாநகராட்சி நடவடிக்கை appeared first on Dinakaran.

Tags : CHENNAI ,Chennai Rayapuram ,
× RELATED சென்னை ரெட்டேரி அருகே புத்தகரத்தில்...