×

இலங்கை தமிழர்கள் 7 பேர் தனுஷ்கோடி வருகை: பொருளாதார நெருக்கடியால் தமிழ்நாட்டில் தஞ்சம்

சென்னை: இலங்கை தமிழர்கள் 7 பேர் அகதிகளாக தனுஷ்கோடி அரிச்சல் முனைக்கு வருகை தந்துள்ளனர். இலங்கையில் கடுமையான பொருளாதார நெருக்கடி ஏற்பட்டு அங்குள்ள மக்கள் வாழ வழியின்றி அண்டை நாடுகளான இந்தியா, ஆஸ்திரேலியாவுக்கு நாளுக்கு நாள் இடம் பெயர்ந்த வருவது அதிகரித்து வருகிறது.இதனால் கடந்த ஆண்டு முதல் இலங்கையில் இருந்து 100 இலங்கை தமிழர்கள் அகதிகளாகமண்டபம் அகதிகள் மறுவாழ்வு முகாமில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் இன்று அதிகாலை ஒரே குடும்பத்தை சேர்ந்த 7 பேர் இலங்கையில் இருந்து வாழ்வாதாரம் தேடி அகதிகளாக ராமநாதபுரம் மாவட்டம் தனுஷ்கோடி அரிச்சல் முனைக்கு வந்துள்ளனர். அகதிகளாக தஞ்சமடைந்த 7 பேரையும் மரைன் போலீசார் மண்டபம் பகுதிக்கு அழைத்துச் சென்றனர். பின்னர், மண்டபம் காவல் நிலையத்தில் இலங்கை அகதிகள் 7 பேரும் ஒப்படைக்கப்பட்டு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post இலங்கை தமிழர்கள் 7 பேர் தனுஷ்கோடி வருகை: பொருளாதார நெருக்கடியால் தமிழ்நாட்டில் தஞ்சம் appeared first on Dinakaran.

Tags : Dhanushkodi ,Tamil Nadu ,Chennai ,Tamils ,Dhanushkodi Arichal Point ,Sri Lanka ,
× RELATED மீனவர்கள் எச்சரிக்கையை அலட்சியம்...