×

தேசிய நீளம் தாண்டுதல் போட்டியில் சாதனை படைத்த மாணவருக்கு பாராட்டு

திண்டுக்கல், நவ. 27: தேசிய நீளம் தாண்டுதல் போட்டியில் சாதனை படைத்த திண்டுக்கல் மாணவருக்கு நேற்று பாராட்டு விழா நடைபெற்றது. கோயம்புத்துாரில் தேசிய தடகள போட்டி நடந்தது. இதில் 17 வயதிற்குட்பட்டோர் பிரிவில் நீளம் தாண்டுதல் போட்டியில் திண்டுக்கல் பள்ளி மாணவன் ஜித்தின் அர்ஜூன் பங்கேற்றார். இதில் 7.35 மீட்டர் தாண்டி புதிய சாதனையை அவர் படைத்தார். சாதனை படைத்த ஜித்தின் அர்ஜூனனுக்கு, திண்டுக்கல் வி.ஜி. ஸ்போர்ட்ஸ் அகாடமி சார்பில் பாராட்டு விழா நடந்தது.

விழாவிற்கு தேசிய ஹாக்கி விளையாட்டு வீரர் ஞானகுரு தலைமை வகித்தார். மாவட்ட குத்துச்சண்டை அகாடமி தலைவர் ஜான் ஆரோக்கியசாமி, மாவட்ட ஹாக்கி சங்க துணைத்தலைவர் பரந்தாமன், தடகள பயிற்சியாளர் சந்திரசேகரன் முன்னிலை வகித்தனர். சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட திமுக பகுதி கழக செயலாளரும் முன்னாள் கால்பந்து வீரருமான இராஜேந்திரகுமார் மாணவனுக்கு பரிசு தொகை மற்றும் பரிசு வழங்கி பாராட்டினார்.

The post தேசிய நீளம் தாண்டுதல் போட்டியில் சாதனை படைத்த மாணவருக்கு பாராட்டு appeared first on Dinakaran.

Tags : National Longitudinal Crossing Competition ,Dindigul ,National Long Distance Competition ,Dinakaran ,
× RELATED திண்டுக்கல்லில் குடிமகன்களின் கூடாரமாக மாறிய பயணிகள் நிழற்குடை