×

விதி மீறல் வாகனங்கள் குறித்து வட்டார போக்குவரத்து அதிகாரிகள் சோதனை: ரூ.16.17 லட்சம் அபராதம்

 

மதுரை, நவ. 27: தமிழ்நாடு அரசின் வட்டார போக்குவரத்துத்துறை கமிஷனர் சண்முகசுந்தரம் உத்தரவின் பேரில், மதுரை கலெக்டர் சங்கீதா வழிகாட்டுதலின்படி மதுரை சரக போக்குவரத்து இணை கமிஷனர் சத்தியநாரயணன் தலைமையில் வட்டார போக்குவரத்து அலுவலர்கள் கார்த்திகேயன், சிங்காரவேலு, சித்ரா மற்றும் மோட்டார் வாகன ஆய்வாளர்கள் உலகநாதன், முரளி, சரவணக்குமார், செல்வம், சம்பத்குமார், அனிதா, சுகந்தி மனோகரன் ஆகியோர் பல்வேறு குழுக்களாக பிரிந்து மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் திடீர் வாகன சிறப்பு சோதனையில் ஈடுபட்டனர்.

இதில் 720 வாகனங்கள் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டு 135 வாகனங்களுக்கு சோதனை அறிக்கை வழங்கப்பட்டது. இதில் சரக்கு வாகனத்தில் அதிக எடை ஏற்றிய 18 வாகனங்கள், சரக்கு வாகனத்தில் ஆட்களை ஏற்றிய 7 வாகனங்கள், வாகன நிறுத்த விளக்கு எரியாத 17 வாகனங்கள், அனுமதி சீட்டு இல்லாமல் இயக்கிய 9 வாகனங்கள், தகுதி சான்றில்லா 26 வாகனங்கள், புகை சான்று மற்றும் ஓட்டுநர் உரிமம் இன்றி இயக்கிய 37 வாகனங்களின் உரிமையாளர்களிடம் அபராதமாக ரூ.14 லட்சத்து 28 ஆயிரத்து 200, வரியாக ரூ.1 லட்சத்து, 89 ஆயிரத்து 343 என மொத்தம் 16 லட்சத்து 17 ஆயிரத்து 543 வசூலிக்கப்பட்டது.

இதில் 33 வாகனங்கள் சிறைபிடிக்கப்பட்டு அந்தந்த வட்டார போக்குவரத்து அலுவலகங்களில் நிறுத்திவைக்கப்பட்டன. இந்த சிறப்பு சோதனை தொடரும் எனவும், வாகன ஓட்டுநர்கள் தங்களுடைய வாகனத்தின் வரி மற்றும் அரசுக்கு செலுத்த வேண்டிய நிலுவை கட்டணங்களை செலுத்தி இயக்க ே வேண்டும் என்றும் வட்டார போக்குவரத்து அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.

The post விதி மீறல் வாகனங்கள் குறித்து வட்டார போக்குவரத்து அதிகாரிகள் சோதனை: ரூ.16.17 லட்சம் அபராதம் appeared first on Dinakaran.

Tags : Madurai ,Tamil Nadu ,Regional ,Transport ,Commissioner ,Shanmugasundaram ,Collector ,Sangeetha ,
× RELATED அரசாணை விதிகளை பின்பற்றி மணல் விற்பனை...