×

பயணிகள் நிழற்குடை படிக்கட்டு சேதம்: சீரமைக்க மாற்றுத்திறனாளிகள் கோரிக்கை

 

மண்டபம், நவ.27: வேதாளை ஊராட்சி பகுதியில் பயணிகள் நிழற்குடை பகுதிக்கு மாற்றுத்திறனாளிகள் ஏரி செல்லும் படிக்கட்டு சேதமடைந்துள்ளதால், அதை சீரமைக்க மாற்றுத்திறனாளிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். மண்டபம் வேதாளை ஊராட்சி பகுதியில் ராமேஸ்வரம்-ராமநாதபுரம் தேசிய நெடுஞ்சாலையில் வலையர் வாடி என்ற பகுதியில் வேதாளை பேருந்து நிறுத்தம் அமைந்துள்ளது. இந்த பேருந்து நிறுத்தத்தின் அருகே மண்டபம் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் சார்பில் பயணிகள் நிழற்குடை அமைக்கப்பட்டுள்ளது.

இந்த நிழல்கூடையில் ஆண்கள்,பெண்கள், மாற்றுத்திறனாளிகள் என மூன்று பிரிவுகளாக அமைந்துள்ளது. இந்த மூன்று பிரிவுகளுக்கும் தனித்தனி படிக்கட்டுகள் ஏறி செல்வதற்கும் அமைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் மாற்றுத்திறனாளிகள் ஏறிச் செல்லும் படிக்கட்டு சேதம் அடைந்துள்ளது.

இதனால் வெயில் நேரம் மற்றும் மழை நேரத்தில் கூட இந்த பயணிகள் நிழற்குடைக்கு ஏறி செல்ல முடியாமல் மாற்றுத்திறனாளிகள் தவித்து வருகின்றனர்.  ஆதலால் இந்த படிக்கட்டை சீரமைத்து மாற்றுத்திறனாளிகள் இலகுவாக பயணிகள் நிழற்குடைக்குள் சென்று பேருந்து வரும் வரை ஓய்வு எடுப்பதற்கு வேதாளை ஊராட்சி நிர்வாகம் மற்றும் மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க மாற்றுத்திறனாளிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

The post பயணிகள் நிழற்குடை படிக்கட்டு சேதம்: சீரமைக்க மாற்றுத்திறனாளிகள் கோரிக்கை appeared first on Dinakaran.

Tags : Mandapam ,Vedalai panchayat ,
× RELATED மண்டபம் கடற்கரை பூங்காவில் பாம்பன்...