×

கார்த்திகை தீப தினத்தை முன்னிட்டு பூ வாங்க குவிந்த பொதுமக்கள்

 

திருப்பூர், நவ. 27: கார்த்திகை தீப தினத்தை முன்னிட்டு மாநகராட்சி தினசரி பூ மார்க்கெட்டில் பூ வாங்க பொதுமக்கள் குவிந்தனர். ஒரு கிலோ மல்லிகை ரூ.2 ஆயிரத்திற்கு விற்பனை செய்யப்பட்டது. கார்த்திகை தீப தினத்தை முன்னிட்டு திருப்பூர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் கடந்த 2 நாட்களாக அகள் விளக்குகள் விற்பனை மும்முரமாக நடைபெற்றது. இந்நிலையில் கார்த்திகை தீப தினமான நேற்று திருப்பூர் பழைய பஸ் நிலையம் அருகே உள்ள மாநகராட்சி தினசரி பூ மார்க்கெட்டில் பூக்கள் வாங்க பொதுமக்கள் பலரும் குவிந்தனர்.

பூக்கள் விற்பனையும் மும்முரமாக நடந்தது. மல்லிகை ஒரு கிலோ ரூ.2 ஆயிரத்துக்கும், சம்பங்கி ரூ.100க்கும், முல்லை ரூ.800க்கும், ஜாதிமல்லி ரூ.900க்கும், செவ்வந்தி ரூ.200க்கும் விற்பனை செய்யப்பட்டது. இது குறித்து பூ வியாபாரிகள் கூறியதாவது: தீப தினத்தை முன்னிட்டு காலை முதலே பொதுமக்கள் பலரும் தங்களுக்கு தேவையான பூக்களை வாங்க வந்தனர்.

பழைய பஸ் நிலையம் மற்றும் ஈஸ்வரன் கோவில் அருகே தினசரி பூ மார்க்கெட் இருப்பதால் பொதுக்கள் சிரமம் இன்றி வந்து செல்கிறார்கள். அவர்களுக்கு தேவையான பூக்களும், நியாயமான விலையில் கிடைப்பதில் அதிகளவு வருகை தருகிறார்கள். வரத்து குறைவு உள்ளிட்ட காரணங்களால் மல்லிகை பூ அதிகபட்சமாக கிலோ ரூ.2 ஆயிரத்திற்கு விற்பனையானது. மற்ற பூக்கள் அனைத்தும் சராசரியான விலையிலேயே விற்பனை செய்யப்பட்டது. இவ்வாறு அவர்கள் கூறினர்.

The post கார்த்திகை தீப தினத்தை முன்னிட்டு பூ வாங்க குவிந்த பொதுமக்கள் appeared first on Dinakaran.

Tags : Karthika Deepa Day ,Tirupur ,Corporation ,
× RELATED மின் மோட்டார் பழுதை சரி செய்ய கோரிக்கை