×

வெள்ளக்கோவிலில் அதிகாலையில் குறைகளை கேட்கும் நகராட்சி ஆணையர்

 

வெள்ளக்கோவில், நவ.27: வெள்ளக்கோவில் நகராட்சியில் உள்ள 21 வார்டுகளில் 14 ஆயிரம் குடும்பங்களில் சுமார் 60 பேர் வசித்து வருகின்றனர். இந்நிலையில் நகராட்சி தலைவர், கமிஷனர் ஆகியோர் பல்வேறு மக்கள் பணிகளை திறம்பட செய்து வருகின்றனர். வீடுகள், கடைகளுக்கு சொத்துவரி நிர்ணயம், வசூல் செய்யும் பணிகள் தெருக்கள் பராமரிப்பு தெருவிளக்குகள் பராமரிப்பு அடிநீர்குழாய்கள் பராமரிப்பு பாதாள சாக்கடை மற்றும் திறந்த வெளி சாக்கடை மராமத்து குடிநீர் விநியோகம் மற்றும் நீரேற்றம் பொது சுகாதாரம் மற்றும் ஆரம்ப சுகாதாரம் பாலர்வாடி பள்ளிகள் பிறப்பு, இறப்பு பணிகள் பதிவேடு பராமரிப்பு முக்கியமான துப்புரவு பணி மற்றும் பணியாளர்கள் பராமரிப்பு உள்பட பல்வேறு பணிகணை கவனிக்கின்றனர்.

நகராட்சியில் வரும் புகார்கள் குறித்து உடனடியாக நடவடிக்கை எடுத்தும் வருகிறது. நகராட்சியில் உள்ள பலர் காலை 9 மணிக்கு வேலைக்கு சென்று விட்டு மாலை வீடு திருப்புகின்றனர். இதனால் சில குறைகளை அலுவலகத்துக்கு சென்று தெரிவிக்க முடிவதில்லை. இதனால் வெள்ளக்கோவில் நகராட்சி கமிஷனர் வெங்கடேஸ்வரன் அதிகாலை நேரத்திலேயே நகராட்சி பகுதிக்கு சென்று பொதுமக்களின் குறைகளை கேட்டறிந்து உடனடியாக நடவடிக்கை எடுத்து வருகின்றார். அப்போது, நடக்கும் பணிகளையும் ஆய்வு மேற்கொண்டு வருகிறார். இதனால் வெள்ளக்கோவில் நகராட்சி வரி வசூலில் முதலிடம் பிடித்துள்ளது குறிப்பிடத்தக்கதாகும். இதையடுத்து அரசு அதிகாரிகளிடம் மட்டுமின்றி பொதுமக்களிடமும் நகராட்சி ஆணையருக்கு பாராட்டு குவிந்து வருகிறது.

The post வெள்ளக்கோவிலில் அதிகாலையில் குறைகளை கேட்கும் நகராட்சி ஆணையர் appeared first on Dinakaran.

Tags : Municipal Commissioner ,Vellakovil ,Vellakovil Municipality ,
× RELATED மாடு முட்டுவது, நாய் கடிப்பது என்பது...