×

முன்விரோதத்தில் அரிவாள் வெட்டு சென்னையில் வாலிபர் கைது

போடி, நவ. 27: போடி சுப்புராஜ் நகர் ஜெயம் நகரில் உள்ள சந்தன மாரியம்மன் கோயில் தெருவில் குடியிருப்பவர் முருகேசன் (39). இவர் மனைவியுடன் குடும்ப தகராறு ஏற்பட்டது. அதே பகுதியைச் சேர்ந்த துரைசாமி மகன் தமிழன் (எ) இளந்தமிழன் அவரது மனைவிக்கு ஆதரவாக முருகேசனை சத்தம் போட்டார். இதனால் ஏற்பட்ட முன்விரோதத்தில் கடந்த அக்.16ம் தேதி இளந்தமிழன் ஒருவருடன் சேர்ந்து முருகேசனை அரிவாளால் வெட்டி விட்டு தப்பியோடினார்.

இதில் படுகாயமடைந்த முருகேசன் புகாரில், போடி நகர் போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்தனர். அதன்பின் தனிப்படை போலீசார், தலைமறைவான தமிழனை தேடி வந்தனர். இந்நிலையில், சென்னையில் அவர் இருப்பது தெரியவந்து, அங்கு சென்ற தனிப்படை போலீசார் நேற்று இளங்தமிழனை கைது செய்து போடிக்கு அழைத்து வந்தனர். அதன்பின், இளந்தமிழனை போடி கோர்ட்டில் ஆஜர்படுத்தி தேனி தேக்கம்பட்டி சிறையில் அடைத்தனர்.

The post முன்விரோதத்தில் அரிவாள் வெட்டு சென்னையில் வாலிபர் கைது appeared first on Dinakaran.

Tags : Scythe ,Chennai ,Bodi ,Murugesan ,Chandana Mariamman Koil Street ,Bodi Subbaraj Nagar Jayam Nagar ,Munrodom ,
× RELATED போடி மற்றும் அதன் சுற்றுவட்டாரங்களில் நள்ளிரவு முதல் சாரல் மழை