×

சென்னையில் ஒரு வார சோதனை வழிப்பறி செய்த 7 பேர் கைது: 6 செல்போன்கள், பைக் பறிமுதல்

 

சென்னை: சென்னை மாநகர காவல் எல்லையில் கடந்த ஒரு வாரத்தில் வழிப்பறி மற்றும் வாகன திருட்டில் ஈடுபட்டதாக 7 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 6 செல்போன்கள் மற்றும் ஒரு பைக் பறிமுதல் செய்யப்பட்டது. சென்னை மாநகர காவல் எல்லையில் தொடர் வாகன திருட்டு மற்றும் செல்போன் பறிப்பில் ஈடுபட்டு வரும் குற்றவாளிகளை கைது செய்ய, போலீஸ் கமிஷனர் சந்தீப் ராய் ரத்தோர் உத்தரவுப்படி குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர்கள் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.

இந்த தனிப்படையினர் சென்னை முழுவதும் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். அதன்படி கடந்த 19ம் தேதி முதல் 25ம் தேதி வரையிலான, 7 நாட்களில் வீடுகள் முன்பு நிறுத்தப்பட்டிருந்த இருசக்கர வாகனங்கள் திருட்டு மற்றும் சாலையில் நடந்து செல்வோரிடம் செல்போன் பறிப்பில் ஈடுபட்டதாக தனித்தனியாக 4 வழக்குகள் பதிவு செய்து, 7 கொள்ளையர்களை கைது செய்தனர். அவர்களிடம் இருந்து வழிப்பறி செய்த பொதுமக்களிடம் இருந்து வழிப்பறி செய்த 6 செல்போன்கள், ஒரு பைக் பறிமுதல் செய்யப்பட்டது.

The post சென்னையில் ஒரு வார சோதனை வழிப்பறி செய்த 7 பேர் கைது: 6 செல்போன்கள், பைக் பறிமுதல் appeared first on Dinakaran.

Tags : Chennai ,Metropolitan ,
× RELATED சென்னை பெருநகர் வளர்ச்சி...