×

ஈரோடு ரயில் நிலையத்தில் 80 அடி டவரில் ஏறி வடமாநில வாலிபர் தற்கொலை மிரட்டல்

ஈரோடு: ஈரோடு ரயில் நிலையத்தில் லோகோ பைலட்டுகள் அலுவலகம் உள்ளது. இதன் அருகே 80 அடி உயரத்தில் ஹைமாஸ் மின் விளக்கு டவர் உள்ளது. இதில், நேற்று முன்தினம் மதியம் 2 மணி அளவில் 30 வயது மதிக்கத்தக்க வடமாநில வாலிபர் ஒருவர் திடீரென ஏறி தற்கொலை மிரட்டல் விடுத்தார். இதையடுத்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு ரெயில்வே போலீசார் மீட்க முயற்சித்தும் முடியவில்லை. மாலை 5.30 மணியளவில் பலத்த மழை பெய்ததும் அவர் கீழே இறங்கமால் இருந்தார் மழையில் நனைந்தபடி டவர் மேலேயே தொடர்ந்து அமர்ந்திருந்தார். நேற்று அதிகாலை 2.45 மணியளவில் அந்த வாலிபர் நன்றாக தூங்க தொடங்கினார். அப்போது டவரில் நன்கு ஏறத் தெரிந்த ஒருவரை போலீசார் அழைத்து வந்து டவரில் ஏற வைத்தனர். அவர் டவரில் ஏறிச் சென்று அந்த வாலிபரை மடக்கி பிடித்து மீட்டனர். விசாரணையில் அவர் மத்திய பிரதேச மாநிலம், தீவான் டோலா பகுதியை சேர்ந்த ராகுல் மார்கம் (26) என்பதும், கேரளாவில் அவரது நண்பரை பார்க்க ரயிலில் வந்தபோது, வழி தவறி ஈரோட்டில் இறங்கி விட்டதும் தெரியவந்தது. பின்னர் கேரள மாநிலம், இடுக்கி மாவட்டத்தில் உள்ள அவரது நண்பர் ராகுல் மார்கமை வரவைத்து அவருடன் அந்த வாலிபரை அனுப்பி வைத்தனர்.

The post ஈரோடு ரயில் நிலையத்தில் 80 அடி டவரில் ஏறி வடமாநில வாலிபர் தற்கொலை மிரட்டல் appeared first on Dinakaran.

Tags : Northern ,Erode railway station ,Erode ,Loco Pilots ,Haimas power station ,Dinakaran ,
× RELATED வட மாநில தொழிலாளர்கள் சொந்த ஊருக்கு...