×

தமிழ்நாடு பெங்கால் மோதல்: விஜய் ஹசாரே டிராபி

மும்பை: விஜய் ஹசாரே டிராபி ஒருநாள் போட்டித் தொடரின் லீக் ஆட்டத்தில், தமிழ்நாடு – பெங்கால் அணிகள் இன்று மோதுகின்றன. இ பிரிவில் இடம் பெற்றுள்ள தமிழ்நாடு அணி தனது முதல் லீக் ஆட்டத்தில் கோவா அணியை 33 ரன் வித்தியாசத்தில் வீழ்த்தியது. அந்த போட்டியில் தொடக்க வீரர் சாய் சுதர்சன் 125 ரன், கேப்டன் தினேஷ் கார்த்திக் 47*, பாபா அபராஜித் 40 ரன் விளாசினர். பந்துவீச்சில் சந்தீப் வாரியர் 4 விக்கெட் கைப்பற்றினார். தமிழ்நாடு ஒரு போட்டியில் விளையாடி 4 புள்ளிகளுடன் 3வது இடத்தில் உள்ளது.

பெங்கால் அணி தனது முதல் போட்டியில் நாகாலாந்தை 9 விக்கெட் வித்தியாசத்திலும், 2வது போட்டியில் பரோடாவை 95 ரன் வித்தியாசத்திலும் வீழ்த்தி 8 புள்ளிகளுடன் 2வது இடம் வகிக்கிறது. மத்திய பிரதேச அணியும் தொடர்ச்சியாக 2 வெற்றிகளுடன் (8 புள்ளி) இ பிரிவில் முதலிடத்தில் உள்ளது. இந்த நிலையில், பெங்கால் அணியுடன் தமிழ்நாடு இன்று பலப்பரீட்சையில் இறங்குகிறது. இந்த போட்டி மும்பை, பிராபோர்ன் அரங்கில் காலை 9.00 மணிக்கு தொடங்குகிறது. ஏ பிரிவில் இடம் பெற்றுள்ள புதுச்சேரி அணி தனது 3வது லீக் ஆட்டத்தில் இன்று மும்பை அணியின் சவாலை எதிர்கொள்கிறது. இப்போட்டி ஆலூரில் நடக்கிறது. மும்பை 8 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ள நிலையில், புதுச்சேரி (4 புள்ளி) 7வது இடத்தில் பின்தங்கியுள்ளது.

The post தமிழ்நாடு பெங்கால் மோதல்: விஜய் ஹசாரே டிராபி appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu ,Bengal ,Vijay Hazare Trophy ,Mumbai ,Vijay Hazare Trophy ODI ,Vijay Hazare ,Dinakaran ,
× RELATED மீன்பிடி தடைக்காலம் எதிரொலி...