×

கர்நாடகா மாநிலத்தில் தொடர் மழை காரணமாக தென்பெண்ணை ஆற்றில் வெள்ளப்பெருக்கு: கரையோர மக்களுக்கு எச்சரிக்கை

கர்நாடகா மாநிலத்தில் தொடர் மழை காரணமாக தென்பெண்ணை ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இன்று காலை நிலவரப்படி 1,234 கனஅடி நீரானது வந்துகொண்டிருக்கிறது. தற்போது அணை பகுதியில் மதகுகள் சரி பார்க்கும் பணி நடைபெற்று வருவதால் அணைக்கு வரக்கூடிய நீர் முழுவதும் அப்படியே வெளியேற்றப்படுகிறது.

அவ்வாறு இன்று காலை அணைக்கு வந்த 1,120 கனஅடி நீரானது முழுவதுமாக வெளியேற்றப்பட்டு வருகிறது. இதன் காரணமாக கர்நாடக பகுதியில் உள்ள தொழிற்சாலைகளில் இருந்து வெளியேற்றகூடிய ரசாயன கழிவுகள் தண்ணீரில் கலந்து வருவதால் அணை பகுதியில் நுரையாக காட்சியளிக்கிறது.

மேலும் அதிகபடியான தண்ணீர் வெளியேற்றப்படுவதால் தென்பெண்ணை கரையோரம் உள்ள சுமார் 19 கிராம மக்களுக்கு மாவட்ட நிர்வாகம் சார்பில் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கபட்டுள்ளது. விவசாயிகள் ஆற்றில் ஆடு, மாடுகளை கழுவவோ, துணி துவைக்கவோ, குளிக்கவோ கூடாது என அறிவுறுத்தபட்டுள்ளது. தொடர்ந்து கனமழை காரணமாக ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்படலாம் என மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.

The post கர்நாடகா மாநிலத்தில் தொடர் மழை காரணமாக தென்பெண்ணை ஆற்றில் வெள்ளப்பெருக்கு: கரையோர மக்களுக்கு எச்சரிக்கை appeared first on Dinakaran.

Tags : South Women River ,Karnataka ,Dinakaran ,
× RELATED ஜாமீனில் வந்த வாலிபர் சரமாரி வெட்டிக்கொலை: கர்நாடக எல்லையில் பயங்கரம்