×

ராஷ்மிகா, கேத்ரினா கைப், கஜோலை தொடர்ந்து நடிகை அலியா பட்டின் ஆபாச வீடியோ வைரல்: ஒன்றிய அரசின் உத்தரவாதம் அமலுக்கு வருமா?

மும்பை: நடிகைகள் ராஷ்மிகா, கேத்ரினா கைப், கஜோலை தொடர்ந்து மற்றொரு நடிகை அலியா பட்டின் ஆபாச வீடியோ வைரலாகி வருகிறது. இதனை தடுக்க ஒன்றிய அரசு புதிய சட்டம் எப்போது கொண்டு வரும் என்ற கேள்வி எழுந்துள்ளது. சமீபகாலமாக சில பாலிவுட் நடிகைகளின் ‘டீப் ஃபேக்’ (ஆபாசமாக சித்தரிக்கப்படும்) போலி வீடியோக்கள் வைரலாகி வருகின்றன. ஏற்கனவே நடிகை ராஷ்மிகா மந்தனாவின் டீப்ஃபேக் வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.

மேலும் நடிகைகள் கேத்ரினா கைப், கஜோல், டெண்டுல்காரின் மகள் சாரா டெண்டுல்கர், தொலைக்காட்சி நடிகைகள் ஜன்னத் ஜூபர், அனுஷ்கா சென் உள்ளிட்டோரின் ஆபாச வீடியோக்களும் வெளியாகின. செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை பயன்படுத்தி உருவாக்குப்படும் இதுபோன்ற போலி ஆபாச வீடியோக்களுக்கு எதிராக, பிரதமர் மோடி, நடிகர் அமிதாப் பச்சன் உள்ளிட்ட பல்வேறு தரப்பிலும் கண்டனங்கள் எழுந்தன. இந்நிலையில் ராஷ்மிகா மந்தனா உள்ளிட்ட நடிகைகளின் போலி வீடியோவை போன்று, மற்றொரு பாலிவுட் நடிகையான அலியா பட்டின் ஆபாச ‘டீப் ஃபேக்’ வீடியோவும் வைரலாகி வருகிறது.

ராஷ்மிகா வீடியோவை காட்டிலும் இந்த வீடியோ மிகவும் ஆபாசமானதாக உருவாக்கப்பட்டுள்ளது. இந்த வீடியோவை ‘pauseshooter’ என்ற இன்ஸ்டாகிராம் மூலம் பகிரப்பட்டுள்ளது. மேலும் ‘அலியா பட் என்னை கொச்சைப்படுத்துகிறார்’ என்ற தலைப்பிடப்பட்டுள்ளது. இந்தக் கணக்கில் ஏராளமான பெண்களின் புகைப்படங்களும், வீடியோக்களும் உள்ளன. இதுபோன்ற வீடியோக்கள் வெளியாவதை தடுக்க புதிய சட்டம் இயற்றப்படும் என்று ஒன்றி மின்னணு மற்றும் தொழில்நுட்பத் துறை இணையமைச்சர் ராஜீவ் சந்திரசேகர், ஒன்றிய தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் ஆகியோர் கூறினர். வரும் நாடாளுமன்ற கூட்டத் தொடரில் ‘டீப் ஃபேக்’ வீடியோவை தடுப்பதற்கான நடவடிக்கைகள் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ரசிகர் மன்றங்களுக்கு நடிகை எச்சரிக்கை: பாலிவுட் நடிகையும், ஆம்ஆத்மி எம்பி ராகவ் சதாவின் மனைவியுமான பரினீதி சோப்ரா ெவளியிட்ட பதிவில், ‘ரசிகர் மன்றங்கள் என்ற பெயரில், எனது பெயரைப் பயன்படுத்தி போலியான தகவல்கள் பரப்பப்படுகிறது. நான் எவரை பற்றியும் பேட்டி அளிக்கவில்லை. கருத்துகளும் கூறவில்லை. யாரையும் வாழ்த்தவும் இல்லை, யாரையும் பாராட்டவுமில்லை. நான் பார்த்துக் கொண்டு தான் இருக்கிறேன். பின்னர் உங்களுக்குத் தெரிவிக்கிறேன். உண்மைகளைச் சரிபார்த்துக் கொள்ளுங்கள்’ என்று கூறியுள்ளார்.

The post ராஷ்மிகா, கேத்ரினா கைப், கஜோலை தொடர்ந்து நடிகை அலியா பட்டின் ஆபாச வீடியோ வைரல்: ஒன்றிய அரசின் உத்தரவாதம் அமலுக்கு வருமா? appeared first on Dinakaran.

Tags : Rashmika ,Katrina Kaif ,Kajol ,Alia Bhatt ,Union ,Mumbai ,Union Government ,
× RELATED மும்பை விமான நிலையத்தில் பரபரப்பு:...