×

விதிகளை மீறி செயல்பட்டு வந்த வாகனங்களுக்கு ரூ.2.11 கோடி அபராதம்: போக்குவரத்து துறை தகவல்

சென்னை: விதிகளை மீறி செயல்பட்டு வந்த வாகனங்களுக்கு ரூ.2.11 கோடி வரை அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக போக்குவரத்து துறை ஆணையர் சண்முகசந்தரம் தெரிவித்துள்ளார்.அவர் கூறியதாவது: தமிழகம் முழுவதும் கடந்த நவ.25ம் தேதி 12 போக்குவரத்து மண்டலங்களிலும் சோதனை மேற்கொள்ளப்பட்டது. அனைத்து வட்டார போக்குவரத்து அலுவலர்கள், மோட்டார் வாகன ஆய்வாளர்கள், அமலாக்க பிரிவு அதிகாரிகள் மற்றும் அனைத்து சோதனை சாவடிகளில் சோதனை மேற்கொள்ளப்பட்டது.

இந்த பணியின் போது 11,023 வாகனங்களில் சோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில் பல்வேறு விதிமுறைகளை மீறிய 2,281 வாகனங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு அவர்களுக்கு ரூ. 2 கோடியே 11 லட்சத்து 31 ஆயிரத்து 400 விதிக்கப்பட்டது. இந்த நடவடிக்கை வரக்கூடிய காலங்களில் மேலும் துரிதப்படுத்தப்படும் விதிகளை மீறி வாகனங்களை இயக்கினால் அவர்களுக்கான அபராதம் கட்டாயம் விதிக்கப்படும்.

The post விதிகளை மீறி செயல்பட்டு வந்த வாகனங்களுக்கு ரூ.2.11 கோடி அபராதம்: போக்குவரத்து துறை தகவல் appeared first on Dinakaran.

Tags : Transport Department Information ,Chennai ,Commissioner ,Shanmugachandaram ,
× RELATED காணும் பொங்கலன்று பைக் ரேஸில்...