×

போர் நிறுத்த ஒப்பந்தத்தின்படி இரண்டாவது கட்டமாக 17 பணயக் கைதிகள் விடுவிப்பு

ஜெருசலேம்: இஸ்ரேல் – ஹமாஸ் போர் நிறுத்த ஒப்பந்தத்தின் அடிப்படையில் இரு தரப்பும் பணயக் கைதிகளை விடுவித்து வருகின்றன. அந்த வகையில் இஸ்ரேல் சிறையில் அடைக்கப்பட்டிருந்த 39 பாலத்தீனிய பெண்கள் மற்றும் இளைஞர்கள் மேற்குக் கரையிலுள்ள ரமல்லாவுக்கு அருகே பெய்துனியா சோதனைச் சாவடியில் விடுவிக்கப்பட்டனர். இதைத் தொடர்ந்து, ஹமாஸ் அமைப்பு 13 இஸ்ரேலிய பணயக் கைதிகளை விடுவித்துள்ளது. அவர்கள் எகிப்து வழியாக இஸ்ரேலை அடைந்துள்ளனர்.

நான்கு நாட்கள் போர் இடைநிறுத்த ஒப்பந்தத்தின் பேரில், 50 பணயக் கைதிகளை விடுவிக்க ஹமாஸும், 150 பாலத்தீன சிறைவாசிகளை விடுவிக்க இஸ்ரேலும் ஒப்புக்கொண்டன. இந்த முக்கியத்துவம் வாய்ந்த போர் நிறுத்த ஒப்பந்தத்தை கத்தார் மத்தியஸ்தம் செய்தது.

தற்போது இரண்டாவது கட்டமாக 17 இஸ்ரேல் மற்றும் வெளிநாட்டு பணயக்கைதிகளை ஹமாஸ் விடுவித்தது. அவர்கள் செஞ்சிலுவைச் சங்கத்திடம் முறையாக ஒப்படைக்கப்பட்டனர். மொத்தமுள்ள 17 பணயக் கைதிகளில் 13 பேர் இஸ்ரேலியர்கள், நான்கு பேர் தாய்லாந்து நாட்டு மக்கள் ஆவர். இவர்கள் எகிப்து வழியாக இஸ்ரேலுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

The post போர் நிறுத்த ஒப்பந்தத்தின்படி இரண்டாவது கட்டமாக 17 பணயக் கைதிகள் விடுவிப்பு appeared first on Dinakaran.

Tags : Jerusalem ,Israel ,Hamas ,Dinakaran ,
× RELATED ஒளிபரப்பு தடை செய்யப்பட்ட நிலையில்...