×

கார்த்திகை தீபத் திருவிழாவை ஒட்டி மலர்ச்சந்தையில் பூக்கள் விலை உயர்வு!

சென்னை: கார்த்திகை தீபத் திருவிழாவை ஒட்டி மலர்ச்சந்தையில் பூக்கள் விலை உயர்ந்துள்ளது. திருக்கார்த்திகை விழா இன்று (26.11.2023) கொண்டாடப் படுவதையொட்டி வீடுகளில் அகல் விளக்குகள் ஏற்றப்படுகின்றன‌. தமிழகம் முழுவதும் கார்த்திகை தீபத்திருவிழா இன்று கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இதையொட்டி மாலை வேளையில் வீடுகளின் வெளிப்புறங்களிலும், வீட்டு முற்றத்திலும் மக்கள் விளக்கேற்றிக் கொண்டாடுவார்கள்.

மேலும் தீபத்திருவிழாவையொட்டி கோவில்களில் சிறப்பு பூஜைகள் நடைபெற்று வருகின்றன. மேலும் பல கோவில்களில் சொக்கப்பனை கொளுத்தும் நிகழ்ச்சியும் நடைபெற உள்ளது. இந்நிலையில், கார்த்திகை தீபத்தையொட்டி பூ மார்க்கெட்டுகளில் பூக்களின் விலை கிடுகிடுவென உயர்ந்துள்ளது.

மதுரை மாட்டுத்தாவணி பூ மார்க்கெட்டில் நேற்று ஒரு கிலோ ரூ.800-க்கு விற்கப்பட்ட முல்லைப் பூ ரூ.1000-க்கும், ரூ.800-க்கு விற்கப்பட்ட கனகாம்பரம் ரூ.1,200-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிலோ பிச்சிப்பூ ரூ.900-லிருந்து ரூ.1000-க்கு விற்பனை செய்யப்படுகிறது. தீபத் திருவிழா, தொடர் மழையால் பூக்களின் வரத்து குறைந்துள்ளதாலும் பூக்கள் விலை உயர்ந்துள்ளது. செவ்வந்திப்பூ அதிகளவில் விற்பனை ஆவதாக வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.

 

The post கார்த்திகை தீபத் திருவிழாவை ஒட்டி மலர்ச்சந்தையில் பூக்கள் விலை உயர்வு! appeared first on Dinakaran.

Tags : Kartika Deepa festival ,Chennai ,Tirukarthikai festival ,Karthikai Deepa festival ,
× RELATED சென்னை கோயம்பேடு மேம்பாலத்தில் ஆண்...