×

காஞ்சிபுரத்தில் வாக்காளர் பட்டியல் பணிகள் குறித்து ஆலோசனை கூட்டம்: கலெக்டர், கட்சி பிரமுகர்கள் பங்கேற்பு

காஞ்சிபுரம், நவ.26: காஞ்சிபுரத்தில், வாக்காளர் பட்டியல் பார்வையாளர் மதுமதி தலைமையில் நடைபெற்ற வாக்காளர் பட்டியல் பணிகள் குறித்து ஆலோசனை கூட்டத்தில் கலெக்டர் கலைச்செல்வி மோகன், அரசியல் கட்சி பிரமுகர்கள் பங்கேற்றனர். காஞ்சிபுரம் மாவட்டத்தில் 4 சட்டமன்ற தொகுதிகளிலும் அமைந்துள்ள அனைத்து வாக்குச்சாவடி மையங்களிலும், வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்க முறை திருத்த பணிகள் நடைபெற்று வருகிறது. இந்தநிலையில் மாவட்ட கலெக்டர் அலுவலக மக்கள் நல்லுறவு மைய கூட்டரங்கில், வாக்காளர் பட்டியல் பார்வையாளரும், சிறு தொழில் வளர்ச்சி கழகத்தின் மேலாண்மை இயக்குநருமான சோ.மதுமதி தலைமையில், வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்க முறை திருத்த பணிகள் தொடர்பாக, அனைத்து அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரமுகர்களுடன் ஆலோசனை கூட்டம் நேற்று நடைபெற்றது.

முன்னதாக ஸ்ரீபெரும்புதூர் வட்டத்திற்கு உட்பட்ட திருமங்கலம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி, சந்தவேலூர் ஊராட்சி ஒன்றிய அரசு நடுநிலைப்பள்ளி, காஞ்சிபுரம் நகரம் அந்திரசன் மேல்நிலைப்பள்ளி, பச்சையப்பன் மேல்நிலைப்பள்ளி உள்ளிட்ட இடங்களில் நடைபெறும் சிறப்பு முகாம்களை கலெக்டர் பார்வையிட்டார். மேலும், மேற்படி வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்க முறை திருத்த முகாம் பணிகள் குறித்து, வாக்காளர் பதிவு அலுவலர்கள், வட்டாட்சியர்கள் ஆகியோர்களுடன் ஆய்வுக்கூட்டம் நடத்தப்பட்டது. இக்கூட்டத்தில் கலெக்டர் கலைச்செல்வி மோகன், மாவட்ட வருவாய் அலுவலர் வெங்கடேஷ், அனைத்து அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரமுகர்கள் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

The post காஞ்சிபுரத்தில் வாக்காளர் பட்டியல் பணிகள் குறித்து ஆலோசனை கூட்டம்: கலெக்டர், கட்சி பிரமுகர்கள் பங்கேற்பு appeared first on Dinakaran.

Tags : Kanchipuram ,Madhumati ,