×

மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கிய மாணவர்கள் சேத்துப்பட்டு அருகே சுவாரஸ்யம் வெடி இல்லாத தீபாவளி கொண்டாடி சேமித்த பணத்தில்

சேத்துப்பட்டு, நவ. 26: சேத்துப்பட்டு அருகே அரசு பள்ளி மாணவர்கள் வெடி இல்லா தீபாவளி கொண்டாடி சேமித்த பணத்தில் மாற்றுத்திறன் மாணவர்களுக்கு நல திட்ட உதவிகளை வழங்கினர். திருவண்ணாமலை மாவட்டம், சேத்துப்பட்டு அடுத்த பத்தியாவரம் புனித வளவனார் ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் வெடியில்லா தீபாவளி கொண்டாடி அதன் மூலம் சேமித்த பணத்தை கொண்டு மாற்றுத்திறன் மாணவர்களுக்கும், மனநிலை பாதிக்கப்பட்டவர்களுக்கும், விபத்துகளில் தண்டுவடம் பாதிக்கப்பட்டு செயலிழந்தவர்களுக்கும் நலத்திட்ட உதவிகளை வழங்கினர். இப்பள்ளியின் தாளாளர் மதலை முத்து, ஆசிரியர்கள் தீபாவளி திருநாளை வெடியில்லாத தீபாவளியாக கொண்டாடுங்கள். அதன் மூலம் சேமிக்கும் பணத்தை பிறருக்கு நல்ல விதத்தில் உதவுங்கள் என அறிவுறுத்தினார்.

இதனை ஏற்ற பள்ளி மாணவர்கள் 754 பேரும் தீபாவளி திருநாளை முன்னிட்டு வாங்கக்கூடிய பட்டாசுகளை வாங்காமல் அதற்கான பணத்தை சேமித்து வகுப்பு வாரியாக ஆசிரியர் மூலம் வழங்கப்பட்டு ₹18 ஆயிரம் மதிப்பில் சோப்பு, சீப்பு, டூத்பிரஸ், பாத் ரூமிற்கு தேவைப்படும் அனைத்து பொருட்களையும், மேலும் மனநிலை பாதிக்கப்பட்டவர்கள், தண்டு வடம் பாதிக்கப்பட்டவர்கள் மாற்றுத்திறன் சிறப்பு பள்ளி மாணவர்கள் ஆகியோருக்கு கைலி மற்றும் தேவையான அத்தியாவசிய பொருட்களை வழங்கினர். முன்னதாக புனித வளவனார் மேல்நிலைப் பள்ளியை நிறுவிய தாமஸ் நினைவு நாள் முன்னிட்டு திருவுருவப்படத்திற்கு தாளாளர் பெனட்ரிக், தலைமையாசிரியர் மதலைமுத்து, மாற்றுத்திறன் மாணவர்கள், சிறப்பு பள்ளி தலைமை ஆசிரியர் ரிப்பேர், உதவி தலைமை ஆசிரியர் பாபு, துணை தலைமையாசிரியர் லட்சுமணன் ஆகியோர் மலர் தூவி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். நிகழ்ச்சியில் ஊராட்சி மன்ற தலைவர் தேன்மொழி இளையபெருமாள்,பள்ளி ஆசிரியர்கள், மாணவர்கள் கலந்து கொண்டனர்.

The post மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கிய மாணவர்கள் சேத்துப்பட்டு அருகே சுவாரஸ்யம் வெடி இல்லாத தீபாவளி கொண்டாடி சேமித்த பணத்தில் appeared first on Dinakaran.

Tags : Diwali ,Chetuppattu ,Sethupattu ,
× RELATED சேத்துப்பட்டு மாதாமலையில் வேன் தலைகீழாக கவிழ்ந்து 10 பேர் காயம்