×

பழுதான மீட்டரை மாற்றி கொடுக்காத மின்வாரியத்துக்கு ₹13500 அபராதம் நுகர்வோர் நீதிமன்றம் உத்தரவு

குலசேகரம்,நவ.26: திருவட்டார் அருகே உள்ள செட்டிசார்விளை பகுதியை சேர்ந்தவர் விஜு (42). சுய தொழில் செய்து வருகிறார். இவரது தாயார் பெயரில் அரசு வழங்கிய பசுமை வீட்டில் வசித்து வருகிறார். இந்த வீட்டில் உள்ள மின் மீட்டர் பழுதாகியுள்ளது. இதனால் கடந்த 2018 ஜூன் மாதம் மின்கட்டணம் ₹2044 வந்துள்ளது. உடனடியாக வீயன்னூரில் உள்ள மின் வாரிய அலுவலகத்தில் புகார் செய்துள்ளார். அவர்கள் கட்டணத்தை செலுத்தவும் தாங்கள் நடவடிக்கை எடுப்பதாக கூறியுள்ளனர். ஆனால் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. தொடர்ச்சியான மாதங்களில் சராசரியாக ₹560 கட்டணம் செலுத்தி வந்துள்ளார். இது சம்பந்தமாக பலமுறை மின்வாரிய அலுவலகத்தில் மனு கொடுத்தும் எவ்வித நடவடிக்கையும் இல்லை. இதனால் மனம் உடைந்த விஜு கடந்த 2019 பிப்ரவரி மாதம் நாகர்கோவில் உள்ள மாவட்ட நுகர்வோர் நீதி மன்றத்தில் முறையிட்டார். இந்த வழக்கில் நீதி மன்றம் தற்போது தீர்ப்பு வழங்கியுள்ளது. இதில் மின் மீட்டரை மாற்றி அமைக்காமல் மன உழைச்சல் ஏற்படுத்தியற்கு ₹10 ஆயிரம், வழக்கு செலவுக்கு ₹2500, அதிக கட்டணம் வசூலுக்கு ₹1000 என ₹13500 அபராதம் விதித்து , இதனை 4 வாரத்தில் மனுதாரருக்கு வழங்க வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளது.

The post பழுதான மீட்டரை மாற்றி கொடுக்காத மின்வாரியத்துக்கு ₹13500 அபராதம் நுகர்வோர் நீதிமன்றம் உத்தரவு appeared first on Dinakaran.

Tags : Kulasekaram ,Viju ,Chettisarvilai ,Tiruvattar ,Dinakaran ,
× RELATED ஷப்பா… வெயில் தாங்க முடியல… நீர்நிலை...