×

வாகனங்கள் எளிதில் கடக்க வசதியாக ரயில்வே கேட்டில் ரப்பர் ஷீட் பதிப்பு சிமெண்ட் கற்கள் அகற்றம்

நாகர்கோவில், நவ.26 : நாகர்கோவில் – திருநெல்வேலி இடையே இரட்டை ரயில் பாதை பணிகள் நடக்கின்றன. இதில் நாகர்கோவில் – ஆரல்வாய்மொழி, திருநெல்வேலி சந்திப்பு – மேலப்பாளையம் இடையே மட்டும் பணிகள் முடிவடையாமல் உள்ளன. இதில் நாகர்கோவில் – ஆரல்வாய்மொழி இடையே பணிகள் டிசம்பரில் நிறைவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் ரயில்வே கேட் அமைந்துள்ள பகுதிகளில் சிமெண்ட் கற்கள் அமைக்கப்படுவதை தவிர்த்து, ரப்பர் ஷீட் பதிக்கும் நடைமுறையை ரயில்வே பின்பற்றுகிறது. சிமெண்ட் கற்களை கடக்க வாகனங்கள் பெரும் சிரமம் அடைகின்றன. இதை தவிர்க்கும் பொருட்டு ரப்பர் ஷீட் பதிக்கப்படுகிறது. தற்போது, புதிதாக 2 வது தண்டவாளம் பதிக்கப்பட்டதை தொடர்ந்து, ரயில்வே கேட் பகுதியில் ரப்பர் ஷீட் பதிக்கும் பணி நடக்கிறது. நாகர்கோவில் – ஆரல்வாய்மொழி இடையே ஆரல்வாய்மொழி தேவசகாயம்மவுண்ட் ரயில்வே கேட், ராஜாவூர் ரயில்வே கேட், குலசேகரன்புதூர் ரயில்வே கேட் பகுதிகளில் ரப்பர் ஷீட் பதிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே சிமெண்ட் கற்கள் பதிக்கப்பட்ட பகுதியிலும், அவற்றை அகற்றி விட்டு ரப்பர் ஷீட் பதிக்கப்பட உள்ளதாக அதிகாரிகள் கூறினர். ரப்பர் ஷீட் பதிக்கப்படும் போது வாகனங்கள் இலகுவாக செல்ல முடியும் என அதிகாரிகள் கூறினர். இந்த பணிகள் நடக்கும் சமயங்களில் ரயில்வே கேட் மூடப்படும் என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

The post வாகனங்கள் எளிதில் கடக்க வசதியாக ரயில்வே கேட்டில் ரப்பர் ஷீட் பதிப்பு சிமெண்ட் கற்கள் அகற்றம் appeared first on Dinakaran.

Tags : Nagercoil ,Tirunelveli ,Dinakaran ,
× RELATED நாகர்கோவில் – திருநெல்வேலி இடையே...