×

புகழிமலை கோயிலுக்கு செல்ல மலைப்பாதை அமைக்க வேண்டும்

 

வேலாயுதம்பாளையம், நவ.26: கரூர் வேலாயுதம்பாளையம் புகழிமலை பாலசுப்பிரமணியசுவாமி கோயிலுக்கு மலைப்பாதை அமைக்க வேண்டும் என்று பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். கரூர் வேலாயுதம்பாளையத்தில் புகழிமலை முருகன் கோயில் அமைந்துள்ளது. கரூரில் வாழ்ந்த சமண முனிவர்களின் பாதுகாப்புக்காக மலையை குடைந்து படுக்கை அமைத்து கொடுத்துள்ளனர். ஆறுநாட்டார்மலை என அழைக்கப்படும் அதில் சேரர்களை பற்றிய தகவல்கள் காணப்படுகின்றன.

முன்பிருந்த கொங்கு 24 நாடுகளில் மணநாடு, தலையநாடு, தட்டையநாடு, கிழங்கு நாடு, வெங்கலநாடு, வாழவந்தி நாடு ஆகிய ஆறுநாட்டவர்களும் குலதெய்வமாக இந்த மலை மீதுள்ள முருகபெருமான் விளங்கியதால் ஆறுநாட்டார் மலை (புகழிமலை) என பெயர்க்காரணம் வந்ததாக கூறப்படுகிறது.

தற்போது அங்குள்ள சமணர் படுக்கைகள் மற்றும் கல்வெட்டுகள் ஆகியவை தொல்லியல் துறை கட்டுப்பாட்டின்கீழ் பராமரிக்கப்பட்டு வருகிறது. இக்கோயிலின் மலை உச்சிக்கு செல்ல 327 படிகளை பக்தர்கள் கடந்து செல்ல வேண்டும். இதில் வயதான பக்தர்கள் இந்த படிகளில் ஏற முடியாமல் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே இந்த கோயிலுக்கு மலைப்பாதை அமைக்க வேண்டும் என்று பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

The post புகழிமலை கோயிலுக்கு செல்ல மலைப்பாதை அமைக்க வேண்டும் appeared first on Dinakaran.

Tags : Pugazhimalai temple ,Velayuthampalayam ,Pugazhimalai Balasubramaniaswamy temple ,Karur Velayuthampalayam ,
× RELATED ஏற்றுமதி இலக்கை அடைந்திட ஒருங்கிணைந்த சிறிய ஜவுளி பூங்கா