×

பிரசவத்திற்கு லஞ்சம் கொடுக்க மறுத்தவர்களை அடிக்க பாய்ந்த செவிலியர் மீது வழக்குப்பதிவு

 

அறந்தாங்கி,நவ.26: புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கியை அடுத்த மீமிசல் மேலத்தெருவை சேர்ந்தவர் சரவணன். இவரது மனைவி சிந்து. இவருக்கு கடந்த 19ம்தேதி மணமேல்குடி அரசு மருத்துவமனையில் பிரசவம் நடந்தது. அங்கு அவருக்கு பெண் குழந்தை பிறந்துள்ளது. அங்கு பணியில் இருந்த செவிலியர் அமுதா, பிரசவம் பார்த்ததற்காக ரூ.5 ஆயிரம் லஞ்சம் கேட்டதாக கூறப்படுகிறது. அப்போது சரவணன் ரூ.3000 மட்டுமே உள்ளது. வைத்துக்கொள்ளுங்கள் கூடுதலாக பணம் இல்லை என்று கூறியுள்ளார்.

இதையடுத்து சிந்து டிஸ்சார்ஜ் செய்யப்படும் நேரத்தில் ரூ.2000த்தை அமுதா கேட்டு சரவணன் மற்றும் அவரது அத்தை கவிதா ஆகியோரை தரக்குறைவாக பேசியதோடு பேசி அடிக்க பாய்ந்துள்ளார். இந்த சம்பவம் வீடியோவாக சமூக வலைதளங்களில் வரைலானது. இதுகுறித்து மணமேல்குடி காவல் நிலையத்தில் சரவணன் புகார் செய்துள்ளார். அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தி வந்தனர்.

இதையடுத்து அறந்தாங்கி குடும்பநல துறை இணை இயக்குனர் கோமதி மணமேல்குடி அரசு மருத்துவமனையில் செவிலியர் அமுதாவிடம் விசாரணை நடத்தினார். இதையடுத்து அசிங்கமாக பேசியது, பொது இடத்தில் அசிங்கமாக பேசி அடிப்பது, கொலை செய்து விடுவேன் என கொலை மிரட்டல் விடுவது ஆகிய பிரிவுகளின் கீழ் செவிலியர் அமுதா மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

The post பிரசவத்திற்கு லஞ்சம் கொடுக்க மறுத்தவர்களை அடிக்க பாய்ந்த செவிலியர் மீது வழக்குப்பதிவு appeared first on Dinakaran.

Tags : Arantangi ,Saravanan ,Mimisal Meleteru ,Pudukottai district ,Sindhu ,Dinakaran ,
× RELATED அறந்தாங்கியில் வெறிநாய் கடித்து 2 பேர் படுகாயம்