×

அணையில் தண்ணீர் திறக்கப்பட்டதால் வைகையில் தொடரும் வெள்ளப்பெருக்கு: மதுரையில் தரைப்பாலம் மூழ்கியது

 

மதுரை, நவ. 26: தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி அருகே உள்ள வைகை அணை முழு கொள்ளளவை எட்டியுள்ள நிலையில், ராமநாதபுரம், சிவகங்கை, மதுரை மாவட்டங்களின் விவசாய தேவைக்காக விநாடிக்கு 4 ஆயிரம் கன அடிநீர் திறக்கப்பட்டுள்ளது. மேலும், பெரியாறு கள்ளந்திரி இரு போக பாசன விவசாயம் மற்றும் திருமங்கலம் ஒரு போக விவசாயம் மற்றும் குடிநீர் தேவைக்காக 1,899 கன அடி என வைகை அணையில் இருந்து மொத்தம் 5,899 கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

இதனால் வைகை ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதன் எதிரொலியாக மதுரையில் உள்ள வைகை வடகரை சாலை மற்றும் சிம்மக்கல் தரைப்பாலம் இரண்டாவது நாளாக நீரில் மூழ்கியுள்ளது. இதனால் அந்த சாலையில் வாகனங்கள் தண்ணீரில் நீந்தியபடியே பயணிக்கின்றன. இதன் எதிரொலியாக அப்பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது.

இதற்கிடையே, மாவட்ட நிர்வாகம் சார்பில் பொதுமக்கள் ஆற்றில் இறங்கவோ, குளிக்கவோ வேண்டாம் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேலும் கால்நடைகளை ஆற்றில் இறக்கி குளிப்பாட்டவோ, அப்பகுதிக்கு மேய்ச்சலுக்கு அனுப்பவோ வேண்டாம் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

The post அணையில் தண்ணீர் திறக்கப்பட்டதால் வைகையில் தொடரும் வெள்ளப்பெருக்கு: மதுரையில் தரைப்பாலம் மூழ்கியது appeared first on Dinakaran.

Tags : Flooding ,Vaigai ,Madurai ,Vaigai Dam ,Antipatti ,Theni district ,Dinakaran ,
× RELATED மதுரை சித்திரைத் திருவிழா: கள்ளழகர்...