×

மதுரை மாநகராட்சியில் வரி வசூலிக்கும் பணிகள் தனியார் மயமாகவில்லை: கமிஷனர் தகவல்

 

மதுரை, நவ. 26: மதுரை மாநகராட்சியில் வரி வசூலிக்கும் பணிகள் தனியார் மயமாக்கப்படவில்ிலை என, கமிஷனர் மதுபாலன் தெரிவித்துள்ளார். மதுரை மாநகராட்சி பொறியியல் பிரிவு சங்கம், தமிழ்நாடு நகராட்சி, மாநகராட்சி அலுவலர் சங்கம் மற்றும் தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் ஆகியவற்றின் நிர்வாகிகள், மாநகராட்சி கமிஷனர் மதுபாலனை சந்தித்தனர். அப்போது மாநகராட்சியில் இணையதளம் வாயிலாக வரி செலுத்தும் முறையை, தனியார் வாயிலாக மேற்கொள்ளும் வகையில் மாற்றக்கூடாது என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மனுவை அளித்தனர்.

அப்போது வரி வசூல் செய்யும் பணிகள் தனியாருக்கு வழங்கப்படவில்லை என கமிஷனர் மதுபாலன் தெரிவித்தார். பின்னர் மனுவில் உள்ள பிற கோரிக்கைகள் தொடர்பாக பரிசீலித்து நடவடிக்கை எடுக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு உத்தரவிடப்படும் என்றார். இச்சந்திப்பில் அரசு ஊழியர் சங்க மாவட்ட செயலாளர் நீதிராஜா, இணைச் செயலாளர் பரமசிவன், மாநில செயற்குழு உறுப்பினர் சிவகுரும்பன், தமிழ்நாடு நகராட்சி, மாநகராட்சி அலுவலர் சங்க மாநில தலைவர் முருகானந்தம், துணைப்பொதுச் செயலாளர் மகுடீஸ்வரன், மதுரை மாநகராட்சி பொறியியல் பிரிவு பணியாளர் சங்க செயலாளர் கண்ணன், பொருளாளர் துரைக்கண்ணன் உள்பட பலர் உடனிருந்தனர்.

The post மதுரை மாநகராட்சியில் வரி வசூலிக்கும் பணிகள் தனியார் மயமாகவில்லை: கமிஷனர் தகவல் appeared first on Dinakaran.

Tags : Madurai Corporation ,Madurai ,Commissioner ,Madhubalan.… ,Dinakaran ,
× RELATED மதுரையில் குழந்தைகள் தத்தெடுப்பு...