×

கண்மாய் பாசனத்திற்கு பார்த்திபனூர் அணையில் தண்ணீர் திறப்பு

பரமக்குடி, நவ.26: வைகை ஆற்றின் பார்த்திபனூர் அணையில் இருந்து கண்மாய் பாசனத்திற்காக வினாடிக்கு 4000 கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டது.  பரமக்குடி அருகே பார்த்திபனூர் அணையில் இருந்து பாசனத்துக்கு தண்ணீர் திறக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. கலெக்டர் விஷ்ணு சந்திரன், எம்எல்ஏக்கள் காதர்பாட்சா முத்துராமலிங்கம், முருகேசன், கருமாணிக்கம் ஆகியோர் கலந்து கொண்டு பார்த்திபனூர் தடுப்பணையில் தண்ணீரை திறந்துவிட்டனர்.

பின்னர் கலெக்டர் கூறியதாவது‘‘முதல்வரின் உத்தரவின் பேரில் கடந்த 23ம் தேதி ராமநாதபுரம் மாவட்ட விவசாயத்திற்காக வைகை அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டது. 29ம் தேதி வரை படிப்படியாக 1504 மில்லியன் கனஅடி தண்ணீர் திறக்கப்படவுள்ளது. வைகை ஆற்றில் இருந்து பார்த்திபனூர் அணைக்கு வந்த தண்ணீரை வினாடிக்கு 4000 கனஅடி வீதம் பாசன வசதிக்காக பார்த்திபனூர் மதகணையில் இருந்து ராமநாதபுரம் பெரியகண்மாய் வரை உள்ள பாசன கால்வாய்களுக்கு இடது மற்றும் வலது கால்வாய்கள் மூலம் தண்ணீர் வழங்கப்பட்டு வருகிறது.

இதன் மூலம் 67,837 ஏக்கர் பாசன நிலங்கள் பயன்பெறும்’’ என்றார். இந்நிகழ்ச்சியில், பரமக்குடி சப்.கலெக்டர் அப்தாப் ரசூல், கீழவை வைகை வடிநில செயற்பொறியாளர் கார்த்திகேயன், மாவட்ட ஊராட்சி குழு தலைவர் வேடிக்வீரன், உதவி செயற்பொறியாளர் கார்த்திகேயன், பரமக்குடி நகர்மன்ற தலைவர் சேது கருணாநிதி, பரமக்குடி தாசில்தார் ரவி, திமுக ஒன்றிய செயலாளர்கள் கிருஷ்ணமூர்த்தி, குணசேகரன், மதகு அணை உதவி பொறியாளர் ஆனந்த் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர். பலர் கலந்து கொண்டனர்.

The post கண்மாய் பாசனத்திற்கு பார்த்திபனூர் அணையில் தண்ணீர் திறப்பு appeared first on Dinakaran.

Tags : Parthibanur dam ,Kanmai ,Paramakudi ,Parthipanur dam ,Vaigai river ,Dinakaran ,
× RELATED கடலாடி, முதுகுளத்தூர் கிராமங்களில்...