×

கடமலைக்குண்டு அருகே முள்வேலியில் சிக்கிய கடமான் மீட்பு

வருசநாடு, நவ. 26: கடமலைக்குண்டு அருகே மேகமலை மலையடிவாரத்தில் மண்ணூத்து கிராமம் உள்ளது. நேற்று காலை மேகமலை மலைப்பகுதியில் இருந்து தாய் மற்றும் குட்டி கடமான் வழிததவறி மண்ணூத்து கிராமத்தை ஒட்டிள்ள தோட்டப்பகுதிக்குள் நுழைந்தது. அப்போது தனியார் தோட்டத்தில் அமைக்கப்பட்டிருந்த முள்வேலியை கடக்க முயன்ற போது குட்டி கடமான் கால் பகுதியில் காயமடைந்தது. இதனால் நடக்க முடியாத நிலையில் இருந்த குட்டி கடமானுடன், தாய் கடமானும் தோட்டப்பகுதியிலேயே நின்று கொண்டிருந்தது. அப்போது அங்கு வந்த தெருநாய்கள் மான்களை தாக்க தொடங்கியது.

இதனையடுத்து தாய் கடமான் காட்டிற்குள் ஓடியது. இதனை கண்ட அப்பகுதி மக்கள் நாய்களை விரட்டி காயமடைந்த குட்டி கடமானை மீட்டு அதன் கண்களை துணியால் கட்டி வைத்து வனத்துறைக்கு தகவல் கொடுத்தனர். இதனையடுத்து அங்கு வந்த மேகமலை வனத்துறை அதிகாரிகள் காயமடைந்த குட்டிகடமானுக்கு முதலுதவி சிகிச்சை அளித்து, மேல்சிகிச்சைக்காக மஞ்சனஊத்தூ வனத்துறை சோதனைச் சாவடிக்கு கொண்டு சென்றனர். குட்டி கடமான் சிகிச்சைக்கு பின்னர் தாய் மான் இருக்கும் வனப்பகுதியில் விடப்படும் என்று வனத்துறையினர் தெரிவித்தனர்.

The post கடமலைக்குண்டு அருகே முள்வேலியில் சிக்கிய கடமான் மீட்பு appeared first on Dinakaran.

Tags : Kadamalaikundu ,Varusanadu ,Meghamalai ,Mannoothu ,Dinakaran ,
× RELATED கடமலைக்குண்டு அருகே நிழற்குடையை சீரமைக்க கோரிக்கை