×

199 தொகுதிகளுக்கான ராஜஸ்தான் மாநில சட்டப்பேரவை தேர்தல் வாக்குப்பதிவு நிறைவு

ஜெய்ப்பூர்: ராஜஸ்தான் மாநில சட்டப்பேரவை தேர்தல் வாக்குப்பதிவு மாலை 6 மணியுடன் நிறைவடைந்தது. மொத்தமுள்ள 200 தொகுதிகளில் 199 தொகுதிகளுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது.

ராஜஸ்தான் 199 தொகுதிகளுக்கு சட்டப்பேரவை தேர்தல் வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்கியது. காலை 7 மணிக்கு தொடங்கி மாலை 5 மணி வரை நடைபெற்றது. ராஜஸ்தானில் மொத்தம் உள்ள 200 சட்டபேரவை தொகுதிகளுக்கு இன்று நவம்பர் 25ம் தேதி தேர்தல் நடக்கும் என அறிவிக்கப்பட்டது. இதில், காங்கிரஸ் வேட்பாளர் ஒருவர் மரணமடைந்ததால் அந்த தொகுதியில் தேர்தல் நிறுத்தப்பட்டு மீதம் உள்ள 199 தொகுதிகளுக்கு தேர்தல் நடைபெற்றது.

ராஜஸ்தான் மாநில சட்டப்பேரவை தேர்தலில் காலை 11 மணி வரை 24.74% வாக்குகள் பதிவாகியது. ராஜஸ்தான் மாநில சட்டப்பேரவை தேர்தலில் மதியம் 1 மணி நிலவரப்படி 40.27% வாக்குகள் பதிவாகி உள்ளது. ராஜஸ்தான் மாநில சட்டப்பேரவை தேர்தலில் பிற்பகல் 3 மணி நிலவரப்படி 56% வாக்குகள் பதிவாகியுள்ளன. ராஜஸ்தான் மாநில சட்டப்பேரவை தேர்தலில் மாலை 5 மணி நிலவரப்படி 68% வாக்குகள் பதிவாகி உள்ளன. ராஜஸ்தானில் உள்ள 33 மாவட்டங்களில் அதிகபட்சமாக ஜெய்சல்மர் மாவட்டத்தில் 77% வாக்குகள் பதிவாகியுள்ளது.

 

The post 199 தொகுதிகளுக்கான ராஜஸ்தான் மாநில சட்டப்பேரவை தேர்தல் வாக்குப்பதிவு நிறைவு appeared first on Dinakaran.

Tags : RAJASTHAN STATE LEGISLATURE ,Jaipur ,Rajasthan ,Dinakaran ,
× RELATED ஷூவிற்குள் மறைந்திருந்து படமெடுத்து மிரள வைத்த பாம்பு