×

கணவர் யார் என்று தெரிவிக்காத நிலையில் குழந்தையை பெற்றெடுத்த பாலிவுட் நடிகை இலியானா: ரசிகரின் வேண்டுகோளால் சஸ்பென்சை உடைத்தார்

மும்பை: கணவர் யார் என்று தெரிவிக்காத நிலையில், குழந்தையை பெற்றெடுத்த நடிகை இலியானா தற்போது சஸ்பென்சை உடைத்து புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். பாலிவுட் நடிகை இலியானா டி குரூஸின் தனிப்பட்ட வாழ்க்கை ரகசியமானதாக இருந்தது. அவரது கணவர் குறித்த விபரங்களை அவர் தெரிவிக்காமல் இருந்தார். கடந்த சில வாரங்களுக்கு முன் இலியானாவுக்கு ஆண் குழந்தை பிறந்தது. அந்த குழந்தைக்கு ஃபீனிக்ஸ் டோலன் என்று பெயரிட்டுள்ளார். அவரது சமூக வலைதள பக்கத்தில் தனது மகனுடனான புகைப்படத்தை பகிர்ந்துள்ளார். இதனை பார்த்த அவரது ரசிகர்கள் ஆச்சரியமடைந்தனர். தொடர்ந்து அவர்கள் சமூக வலைதள பக்கத்தின் வழியாக சில கேள்விகளை இலியானாவிடம் கேட்டனர். அதற்கு அவரும் பதிலளித்துள்ளார். அதில், ‘கடந்த ஓராண்டுக்கு முன் கர்ப்பமானேன்.

நான் கர்ப்பமான விஷயம் நம்பமுடியாத மற்றும் உணர்ச்சிபூர்வமான தருணமாக இருந்தது. தற்போது எனது மகனுடன் இருப்பது மிகவும் அதிசயமாக இருக்கிறது. எனக்கு பிரசவம் ஆன போது எனது தாயாரும் எனது பக்கத்தில் இருந்தார். எனக்கு அவர் தாயாக இருப்பதை நினைத்து பெருமையடைகிறேன்’ என்று கூறினார். மற்றொரு ரசிகர், ‘ஒரு தாயாக நீங்களே குழந்தையை கவனித்துக்கொள்கிறீர்களா?’ என்று கேட்டார். அதற்கு பதிலளித்த இலியானா, ‘நான் மட்டும் அல்ல (இதய ஈமோஜி)’ என்று கூறியுள்ளார். மேலும் கடந்த காலங்களில் தனது ஆண் துணையுடன் இருந்த புகைப்படத்தையும் பகிர்ந்துள்ளார். அவர் யார்? என்பது குறித்து பாலிவுட்டில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.

The post கணவர் யார் என்று தெரிவிக்காத நிலையில் குழந்தையை பெற்றெடுத்த பாலிவுட் நடிகை இலியானா: ரசிகரின் வேண்டுகோளால் சஸ்பென்சை உடைத்தார் appeared first on Dinakaran.

Tags : Bollywood ,Ileana ,Mumbai ,
× RELATED போலி கணக்குகளை தொடங்கி நடிகை வித்யா...