×

தஞ்சையில் விரைவில் விமான போக்குவரத்து: டி.ஆர்.பி. ராஜா பேட்டி

தஞ்சை: தஞ்சையில் விரைவில் விமான போக்குவரத்து தொடங்க உள்ளது என அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா தெரிவித்துள்ளார். இது தொடர்பாக தஞ்சாவூரில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா; தமிழ்நாட்டின் வளர்ச்சிக்காக தஞ்சை, ஒசூரில் பயணிகள் விமான போக்குவரத்து தொடங்க உள்ளது. தஞ்சை விமானப்படை தளத்தின் ஒரு பகுதியில் பயணிகள் விமான போக்குவரத்து விரைவில் தொடங்க உள்ளது. பயணிகள் விமான போக்குவரத்து தொடங்குவதற்கான பணிகள் நடைபெற்று வருகிறது.

தஞ்சை புதிய பேருந்து நிலையம் அருகே ரூ.27.14 கோடி மதிப்பில் டைடல் பார்க் கட்டுமான பணிகள் நடைபெற்று வருகிறது. டெல்டா மாவட்டங்களின் வளர்ச்சிக்காக பல்வேறு பணிகள் துரிதமாக நடைபெற்று வருகிறது. தஞ்சையில் டைடல் பார்க் கட்டுமான பணிகள் முடிந்தவுடன் மிகப் பெரிய நிறுவனங்கள் வர உள்ளன. தொழில்முனைவோருக்கும், இளைஞர்களுக்கும் வேலை வாய்ப்பு கிடைக்கும் எனவும் கூறினார்.

The post தஞ்சையில் விரைவில் விமான போக்குவரத்து: டி.ஆர்.பி. ராஜா பேட்டி appeared first on Dinakaran.

Tags : Thanjay ,T. R. B. ,Thanjai ,Minister ,Thanjavur ,Thanchi ,D. ,Dinakaran ,
× RELATED டெல்டாவில் விடிய விடிய கனமழை: பட்டுக்கோட்டையில் 16 செ.மீ. மழை பதிவு