×

ஓசூர் அருகே கிராமத்திற்குள் 30க்கும் மேற்பட்ட யானைகள் நுழைந்ததால் பரபரப்பு: வனப்பகுதிக்கு யானைகளை விரட்டும் பணி தீவிரம்

கிருஷ்ணகிரி: ஓசூர் அருகே கிராமத்திற்குள் நுழைந்த யானைகளை விரட்டும் பணியில் வனத்துறையினர் ஈடுபட்டுள்ளனர். கர்நாடகா மாநிலம், பன்னார்கட்டா வனப்பகுதியில் இருந்து வெளியேறிய 30க்கும் மேற்பட்ட காட்டு யானைகள், தமிழகத்தின் ஓசூர் அருகேயுள்ள தேன்கனிகோட்டை வனச்சரகத்திற்கு உட்பட்ட நொகனூர் வனப்பகுதியில் புகுந்துள்ளன. மேலும், வனப்பகுதியை ஒட்டியுள்ள நொகனூர், மரக்கட்டா, உச்சனப்பள்ளி உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட கிராமங்களில் வசிக்கும் பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் பாதுகாப்பாக இருக்கும்படி வனத்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

ஏற்கனவே ஊடேதுர்க்கம் வனப்பகுதியில் காட்டு யானைகள் முகாமிட்டிருக்கும் நிலையில், அவற்றை 20க்கும் மேற்பட்ட வனத்துறை அதிகாரிகள் கண்காணித்து வருகின்றனர். மேலும், யானைகளை மீண்டும் கர்நாடக மாநில வனப்பகுதிக்கு விரட்டி விடத் திட்டமிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. பகல் நேரத்தில் வனப்பகுதிக்கு அருகேயுள்ள விவசாயத் தோட்டங்களில் பணிபுரியும்போது பாதுகாப்பாக இருக்கும்படியும், மாலை மற்றும் இரவு நேரத்தில் வனப்பகுதிக்கு அருகே செல்வதைத் தவிர்க்க வேண்டும் என்றும் வனத்துறை அதிகாரிகள் கிராம மக்களை அறிவுறுத்தியுள்ளனர். மேலும், நேற்று மலை முதல் 20க்கும் மேற்பட்ட வனத்துறை ஊழியர்கள் யானை கூட்டங்களை விரட்டுவதற்கான பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.

The post ஓசூர் அருகே கிராமத்திற்குள் 30க்கும் மேற்பட்ட யானைகள் நுழைந்ததால் பரபரப்பு: வனப்பகுதிக்கு யானைகளை விரட்டும் பணி தீவிரம் appeared first on Dinakaran.

Tags : Hosur ,Krishnagiri ,Bannerghatta, Karnataka State ,Dinakaran ,
× RELATED செக் மோசடி வழக்கில் 3 பேருக்கு 2 ஆண்டு சிறை