×

தமிழ்நாட்டில் திருவண்ணாமலை மாவட்டத்தை தவிர்த்து மற்ற மாவட்டங்களில் நவ.25,26 ஆகிய தேதிகளில் வாக்காளர் சிறப்பு முகாம்.!

சென்னை: தமிழகத்தில் இன்றும், நாளையும் வாக்காளர் சிறப்பு முகாம் நடைபெறுகிறது. நாடு முழுவதும் அடுத்த ஆண்டு நாடாளுமன்ற தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், தேர்தல் ஆணையம் அதற்கான முன்னேற்பாடுகளை செய்து வருகிறது. இந்த சூழலில் தமிழ்நாட்டில் வரைவு வாக்காளர் பட்டியல் கடந்த 27ஆம் தேதி வெளியிடப்பட்டது. வாக்காளர் பட்டியலில் திருத்தம் மேற்கொள்ளப்பட்டு ஜனவரியில் இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும்.

இதற்கான சிறப்பு முகாம்கள் நடத்தப்படவுள்ளதாகவும், இதில் பெயர் சேர்த்தல், நீக்குதல் உள்ளிட்ட பணிகளை மேற்கொள்ளலாம் எனவும் தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில் தமிழ்நாட்டில் திருவண்ணாமலை மாவட்டத்தை தவிர்த்து மற்ற மாவட்டங்களில் நவ.25,26 ஆகிய தேதிகளில் வாக்காளர் சிறப்பு முகாம் நடைபெறுகிறது. தீபத்திருவிழாவை முன்னிட்டு திருவண்ணாமலையில் டிச.2,3ல் சிறப்பு முகாம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

The post தமிழ்நாட்டில் திருவண்ணாமலை மாவட்டத்தை தவிர்த்து மற்ற மாவட்டங்களில் நவ.25,26 ஆகிய தேதிகளில் வாக்காளர் சிறப்பு முகாம்.! appeared first on Dinakaran.

Tags : Special ,Voter Camp ,Tamil Nadu ,Tiruvannamalai district ,Chennai ,Voter ,Camp ,Dinakaran ,
× RELATED “சென்னை உலா” என்ற (HOP ON HOP OFF – VINTAGE BUS Services)...