×

இளம்பெண்ணுக்கு செக்ஸ் டார்ச்சர் கிராம நிர்வாக அலுவலர் சஸ்பெண்ட்

*விழுப்புரம் கோட்டாட்சியர் உத்தரவு

விழுப்புரம் : கண்டாச்சிபுரம் அருகே இளம்பெண்ணுக்கு செக்ஸ் டார்ச்சர் கொடுத்த கிராம நிர்வாக அலுவலரை சஸ்பெண்ட் செய்து கோட்டாட்சியர் உத்தரவிட்டுள்ளார்.
விழுப்புரம் மாவட்டம் கண்டாச்சிபுரம் அருகே நல்லாபாளையம் பகுதியை சேர்ந்தவர் இளம்பெண். இவரது கணவர், கடந்த 2014ம் ஆண்டு உடல் நலக்குறைவு காரணமாக உயிரிழந்த நிலையில் 11 வயது மகனுடன் தனியாக வசித்து வருகிறார். இந்நிலையில் கணவரின் இறப்பு சான்றிதழ் மற்றும் விதவை உதவி தொகை வழங்க கோரி நல்லாப்பாளையம் கிராம நிர்வாக அலுவலர் ஆரோக்கியதாஸ் என்பவரை அணுகி விண்ணப்பித்துள்ளார். இந்த சான்றிதழ் வழங்க லஞ்சம் கேட்டநிலையில் ரூ.3 ஆயிரம் வழங்கி இறப்பு சான்றிதழை பெற்றுள்ளார்.

மேலும் விதவைச் சான்றிதழ் கொடுக்க இளம்பெண்ணுக்கு, விஏஓ ஆரோக்கியதாஸ் செக்ஸ் டார்ச்சர் கொடுத்துள்ளார். அவரிடம் செல்போனில் பேசிய ஆதாரங்களுடன் பாதிக்கப்பட்ட பெண், எஸ்பி அலுவலகத்தில் புகார் அளித்தார். இதுகுறித்து கண்டாச்சிபுரம் போலீசார் விசாரணை நடத்திவரும் நிலையில், அவர் மீது துறைரீதியான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. கிராம நிர்வாக அலுவலர் ஆரோக்கியதாசை சஸ்பெண்ட் செய்து கோட்டாட்சியர் காஜாசாகுல்அமீது நேற்று உத்தரவிட்டுள்ளார்.

The post இளம்பெண்ணுக்கு செக்ஸ் டார்ச்சர் கிராம நிர்வாக அலுவலர் சஸ்பெண்ட் appeared first on Dinakaran.

Tags : Villupuram ,Kotatsiyar ,Kandachipuram ,
× RELATED சாலை விரிவாக்கத்தால் அகற்றம்...