×

நிறுத்தப்பட்ட அரசு பஸ் மீண்டும் இயக்க நடவடிக்கை எம்எல்ஏ உறுதி அணைக்கட்டு அடுத்த மலைசந்து பகுதியில்

அணைக்கட்டு,நவ.25: அணைக்கட்டு அடுத்த மலைசந்து பகுதியில் நிறுத்தப்பட்ட அரசு பஸ் மீண்டும் இயக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று எம்எல்ஏ உறுதி அளித்தார். அணைக்கட்டு தாலுகா கெங்கநல்லூர் ஊராட்சி மலைசந்து பகுதியில் நேற்று நடந்த ஒரு கோயில் கும்பாபிஷேக விழாவில் பங்கேற்ற எம்எல்ஏ நந்தகுமார் அருகே இருந்த அரசு தொடக்க பள்ளியின் முன்பு திரண்டிருந்த பொதுமக்களிடம் குறைகளை கேட்டறிந்தார். அப்போது, எங்கள் கிராமத்திற்கு கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்பு 8 எண் கொண்ட அரசு பஸ் வந்தது. இந்த அரசு பஸ் தற்போது இல்லாததால் பள்ளி, கல்லூரிக்கு செல்வோர் சிரமப்படுகின்றனர். எனவே, நிறுத்தப்பட்ட அரசு பேருந்தை மீண்டும் இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். பழுதடைந்த தெருவிளக்குகளை சீரமைக்க வேண்டும். புதிய அங்கன்வாடி மையம் கட்டி தர வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை முன் வைத்தனர்.

அதற்கு குடிநீர், தெருவிளக்கு வசதிகள் செய்து தரப்படும். அதிகமான தேவையிருக்கும் பட்சத்தில் ₹2 லட்சத்தில் மலைசந்து பகுதியில் உள்ள வீடுகளுக்கு தேவையான குடிநீர், தெருவிளக்கு வசதிகள் செய்து தரப்படும். நிறுத்தப்பட்ட அரசு பேருந்தும் மீண்டும் இயக்க போக்குவரத்து துறை அதிகாரிகளிடம் பேசி நடவடிக்கை எடுக்கப்படும் உறுதியளித்தார். அப்போது மாவட்ட ஊராட்சி குழு தலைவர் மு.பாபு, ஒன்றிய செயலாளர்கள் வெங்கடேசன், குமாரபாண்டியன், ஒன்றிய குழு தலைவர் பாஸ்கரன், மாவட்ட கவுன்சிலர் கிருஷ்ணனமேனன், ஒன்றிய கவுன்சிலர் மகாலிங்கம், ஊராட்சி மன்ற தலைவர் செந்தில்குமார், அணைக்கட்டு மத்திய ஒன்றிய துணை செயலாளர் ராமச்சந்திரன், மாவட்ட பிரதிநிதி அஸ்லாம் மற்றும் திமுகவினர் உடனிருந்தனர்.

The post நிறுத்தப்பட்ட அரசு பஸ் மீண்டும் இயக்க நடவடிக்கை எம்எல்ஏ உறுதி அணைக்கட்டு அடுத்த மலைசந்து பகுதியில் appeared first on Dinakaran.

Tags : MLA ,Malasandhu ,Damaktu ,Malasandu ,Dinakaran ,
× RELATED விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தல் வேட்புமனு தாக்கல் இன்று தொடங்குகிறது