×

தென்காசி அருகே ஆட்டோ கவிழ்ந்து பெண் பலி

தென்காசி, நவ.25: தென்காசி மேலகரத்தைச் சேர்ந்தவர் மாரி. ஆட்டோ ஓட்டி வருகிறார். நேற்று இவர் தென்காசியில் இருந்து பொட்டல்புதூருக்கு ஆட்டோவில் உணவு எடுத்துச் சென்றுள்ளார். உணவை பரிமாற மேலஇலஞ்சியை சேர்ந்த மாரியப்பன் மனைவி பொன்சேகா (35) என்ற கேட்டரிங் சர்வீஸ் பெண்ணும் சென்றார். ஆட்டோ மத்தளம்பாறை சாலையில் வழிமறிச்சான் அருகே சென்றபோது எதிரே வந்த டிராக்டரை முந்த முயன்ற பைக், ஆட்டோ மீது மோதியது. ஆட்டோ டிரைவர் மோதலை தவிர்க்க முயன்ற போது எதிர்பாராத விதமாக ஆட்டோ கவிழ்ந்தது. இதில் ஆட்டோவில் பயணித்த கேட்டரிங் சர்வீஸ் பெண் பொன்சேகா சம்பவ இடத்திலேயே பலியானார். மேலும் பைக்கை ஓட்டி வந்த வெய்க்காலிபட்டியைச் சேர்ந்த ரவிக்குமார், அஜய் மற்றும் ஆட்டோ டிரைவர் மாரி ஆகியோருக்கும் காயம் ஏற்பட்டது. இதுகுறித்து குற்றாலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post தென்காசி அருகே ஆட்டோ கவிழ்ந்து பெண் பலி appeared first on Dinakaran.

Tags : Tenkasi ,Mari ,Tenkasi Melakaram ,Potalputur ,
× RELATED அடிப்படை உரிமைகளை நிறைவேற்றாததை...