×

மாரியம்மன் கோயில் கும்பாபிஷேக விழா

பாலக்கோடு, நவ.25: பாலக்கோடு அருகே கணவனஹள்ளி கிராமத்தில் மகாகணபதி, மாரியம்மன் மற்றும் நவகிரக கோயில் புனரமைக்கப்பட்டு, கும்பாபிஷேக விழா நடந்தது. விழா கடந்த 19ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. முக்கிய நாளான நேற்று, கோயில் கலசத்தில் புனித நீர் ஊற்றி, கும்பாபிஷேகம் நடந்தது. பின்னர், கணபதி, மாரியம்மனுக்கு பல்வேறு திரவியங்களால் அபிஷேகம் நடந்தது. அம்மன் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். விழாவிற்கான ஏற்பாடுகளை ஊர் பொதுமக்கள் மற்றும் விழா குழுவினர் செய்திருந்தனர்.

The post மாரியம்மன் கோயில் கும்பாபிஷேக விழா appeared first on Dinakaran.

Tags : Mariamman Temple Kumbabhishek ceremony ,Palakodu ,Mahaganapathi ,Mariamman ,Navagraha ,Kumbabishek ceremony ,Kabujahalli ,Palakodu.… ,Mariyamman Temple Kumbabishek ceremony ,
× RELATED பஸ் ஸ்டாண்டில் கழிப்பிடம் சீரமைப்பு