×

குழித்துறை நகராட்சியில் ₹4 லட்சத்தில் சாலை சீரமைப்பு பணி சேர்மன் பொன் ஆசைத்தம்பி தொடங்கி வைத்தார்

மார்த்தாண்டம், நவ.25: குழித்துறை நகராட்சிக்குட்பட்ட 20வது வார்டு கண்ணகோடு பகுதியான ஓராணி விளைச் சாலை சேதமடைந்து வடிகால் வசதி இல்லாமல் காணப்பட்டது. இதையடுத்து இந்த சாலையோரம் மழை நீர் வடிகால் அமைத்து காங்கிரீட் சாலை அமைக்க வலியுறுத்தி வார்டு கவுன்சிலர் ஜுலியட் மெர்லின் ரூத் குழித்துறை நகர்மன்றத்தில் தீர்மானம் கொண்டு வந்தார். இதையடுத்து கவுன்சில் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு நகராட்சி பொதுநிதியில் இருந்து ரூ.4 லட்சம் ஒதுக்கப்பட்டது. இதற்கான பணிகள் நேற்று தொடங்கப்பட்டது. சாலை பணியை சேர்மன் பொன் ஆசைத்தம்பி தொடங்கி வைத்தார். கவுன்சிலர்கள் விஜு, ஜூலியட், சர்தார் ஷா, ஓவர்சியர் விஜயராஜ், சம்பத், ரவி உட்பட பலர் கலந்து கொண்டனர்.

The post குழித்துறை நகராட்சியில் ₹4 லட்சத்தில் சாலை சீரமைப்பு பணி சேர்மன் பொன் ஆசைத்தம்பி தொடங்கி வைத்தார் appeared first on Dinakaran.

Tags : Sherman Bon Asaithambi ,Cavitara Municipality ,ORANI ,20TH WARD PANORAMA ,KHOTHARA ,Khuthara Municipality ,Dinakaran ,
× RELATED ஏரியில் மூதாட்டி சடலம்