×

குளித்தலை அருகே வீரவள்ளி பகவதி அம்மன் கோயில் கும்பாபிஷேகம்

 

குளித்தலை, நவ. 25: குளித்தலை அருகேயுள்ள வீரவள்ளி கிராம பகவதி அம்மன் கோயில் கும்பாபிஷேகம் நேற்று நடைபெற்றது. முன்னதாக கடந்த 22-ம் தேதி திம்மாச்சிபுரம் காவிரி ஆற்றிலிருந்து புனிதநீர் கொண்டு வரப்பட்டது. பின்னர் விக்னேஷ்வர பூஜை, கணபதி ஹோமம், வாஸ்து சாந்தி, ரக்சாபந்தனம், நாடி சந்தனம் திரவ்யாஹூதி, பூர்ணாஹூதி உள்ளிட்ட 2 கால யாக வேள்வி பூஜைகள் நடந்தது.

நேற்று காலை 2ம் கால யாக வேள்வி பூஜை நிறைவடைந்ததும் சிவாச்சாரியார்கள் புனிதநீர் கும்பத்தை மேளதாளங்கள் முழங்க ஊர்வலமாக கொண்டு வந்தனர். பின்னர் சிவாச்சாரியார்கள் கலசத்திற்கு புனித நீரை ஊற்றி குடமுழுக்கு நடத்தினர். தொடர்ந்து பக்தர்களுக்கு புனித நீர் தெளிக்கப்பட்டது. பின்னர் சுவாமிகளுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. இதில் எம்எல்ஏக்கள் குளித்தலை மாணிக்கம், கிருஷ்ணராயபுரம் சிவகாமசுந்தரி மற்றும் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர். ஏற்பாடுகளை விழா குழுவினர் செய்திருந்தனர்.

The post குளித்தலை அருகே வீரவள்ளி பகவதி அம்மன் கோயில் கும்பாபிஷேகம் appeared first on Dinakaran.

Tags : Veeravalli Bhagavathy Amman Temple Kumbhishekam ,Kulithalai ,Veeravalli ,Bhagavathy Amman temple ,Kulithlai ,Veeravalli Bhagavathy Amman Temple Kumbabhishekam ,
× RELATED அய்யர்மலை கிரிவலப் பாதையில் சேதமடைந்த சாலையால் பக்தர்கள் அவதி