காரைக்கால்,நவ.25: யுடிசி பதவி உயர்வுக்கு துறை சார்ந்த போட்டி தேர்வு நடக்கிறது. இது தொடர்பாக, புதுச்சேரி பணியாளர் மற்றும் நிர்வாக சீர்திருத்தத்துறை சார்பு செயலர் ஜெய்சங்கர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: மேல்நிலை எழுத்தர் (யுடிசி) பதவி உயர்வுக்கான துறை சார்ந்த போட்டி எழுத்து தேர்வு வரும் டிச.3ம் தேதி இரு அமர்வுகளாக புதுச்சேரி முத்தியால்பேட்டையில் உள்ள பாரதிதாசன் மகளிர் கல்லூரியில் நடக்கிறது. அதன்படி, டிச.3 ம் தேதி காலை 10 மணி முதல் மதியம் 12 மணி வரை முதல் தாள் தேர்வும், பகல் 2.30 மணி முதல் மாலை 4.30 மணி வரை இரண்டாம் தாள் தேர்வும் நடைபெறும்.
இத்தேர்வுக்கு பரிந்துரைக்கப்பட்ட பாட திட்டத்தை https://dpar.py.gov.in என்ற இணைதளத்தில் பார்க்க முடியும்.யுடிசி பதவி உயர்வுக்கான துறை சார்ந்த போட்டி தேர்வுக்கான ஹால்-டிக்கெட் கீழே கொடுக்கப்பட்டுள்ள அரசு அலுவலகங்களில் நேற்று முதல் 30ம் தேதி வரை அனைத்து வேலை நாட்களிலும் அலுவலக நேரங்களில் சென்று பெற்றுக் கொள்ளலாம்.
புதுச்சேரி மண்டலத்தை சேர்ந்தவர்கள் தலைமை செயலகத்தில் உள்ள பணியாளர் மற்றும் நிர்வாக சீர்திருத்தத்துறையின் தேர்வு பிரிவுக்கும், காரைக்கால் மண்டலத்தை சேர்ந்தவர்கள் காரைக்கால் ஆட்சியர் அலுவலகத்துக்கும், மாகே மண்டலத்தை சேர்ந்தவர்கள் மாகே மண்டல நிர்வாகி அலுவலகத்துக்கும், ஏனாம் மண்டலத்தை சேர்ந்தவர்கள் ஏனாம் மண்டல நிர்வாகி அலுவலகத்துக்கும் விண்ணப்பதாரர்கள் தங்களது புகைப்படத்துடன் கூடிய சான்றுடன் (அலுவலக அடையாள அட்டை, ஆதார் கார்டு, வாக்காளர் அட்டை,பான் கார்டு ஓட்டுநர் உரிமம்) சென்று ஹால்-டிக்கெட்டை பெற்றுக்கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
The post யுடிசி பதவி உயர்வுக்கு துறை சார்ந்த போட்டி தேர்வு: சீர்திருத்தத்துறை சார்பு செயலர் தகவல் appeared first on Dinakaran.
