காரைக்கால்,நவ.25: காரைக்கால் மாவட்டத்தில் சிறப்பு சுருக்கு முறை வாக்காளர் பட்டியல் திருத்தப்பணி நடைபெற்று வரும் நிலையில் வாக்காளர் பதிவு அதிகாரி துணை ஆட்சியர் ஜான்சன் தலைமையில் காமராஜர் நிர்வாக வளாகத்தில் வாக்குச்சாவடி நிலை அலுவலர்களுடன் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் பேசிய துணை ஆட்சியர் ஜான்சன் வாக்காளர் பட்டியல் திருத்தும் பணிகளை விரைந்து முடிக்குமாறு, புதிதாக 18 வயது நிரம்பிய புதிய வாக்காளர்களை அதிக அளவில் வாக்காளர் பட்டியலில் சேர்ப்பதற்கு, மற்ற விசாரணை பணிகளையும் விரைந்து முடிக்க வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டார்.
வருகிற பாராளுமன்ற தேர்தல் நெருங்குவதை முன்னிட்டு 18 வயது நிரம்பிய ஒருவர் கூட வாக்காளர் பட்டியல் சேர்க்காமல் விடுபட கூடாது என கூறினார்.பொதுமக்கள் தங்களது தங்கள் வீட்டிலோ அல்லது அருகிலோ இருக்கும் 18 வயது நிரம்பிய புதிய வாக்காளர்களை கண்டிப்பாக வாக்காளர் பட்டியலில் சேர்க்க வேண்டும் எனவும் வேண்டுகோள் விடுத்தார்கள். கூட்டத்தில் துணை வாக்காளர் பதிவு அதிகாரிகள் செல்லமுத்து மற்றும் மதன் குமார் ஆகியோர் உடன் இருந்தனர்.
The post 18 வயது நிரம்பிய புதிய வாக்காளர்களை அதிக அளவில் வாக்காளர் பட்டியலில் சேர்க்க வேண்டும்: கலெக்டர் அறிவுறுத்தல் appeared first on Dinakaran.
