×

கறம்பக்குடியில் ஒன்றிய அரசை கண்டித்து தெருமுனை பிரசாரம்

 

கறம்பக்குடி, நவ.25: புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி விவசாய முன்னணி அமைப்பு சார்பாக எந்த வாக்குறுதிகளையும் நிறைவேற்றாத மோடி அரசை கண்டித்து சென்னையில் நடைபெற உள்ள மாபெரும் கண்டன எதிர்ப்பு போராட்டத்திற்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் கறம்பக்குடி விவசாய முன்னணி அமைப்பு சார்பாக தெருமுனை பிரசாரம் நடைபெற்றது. மோடி அரசை கண்டித்து நடைபெற்ற இந்த தெருமுனை பிரசார ஆர்ப்பாட்டத்திற்கு கறம்பக்குடி விவசாய முன்னணி அமைப்பை சார்ந்த பொன்னுச்சாமி, திருஞானம், விஜயன் உள்ளிட்ட அந்த அமைப்பை சார்ந்த விவசாய தோழர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

The post கறம்பக்குடியில் ஒன்றிய அரசை கண்டித்து தெருமுனை பிரசாரம் appeared first on Dinakaran.

Tags : Union government ,Karambakudi ,Karampakudi ,Modi government ,Pudukkottai District Karampakudi Agrarian Front Organisation ,Dinakaran ,
× RELATED ஒன்றிய அரசை கண்டித்து எடப்பாடியில்...