×

சீனா மாஸ்டர்ஸ் பேட்மின்டன் அரையிறுதிக்கு முன்னேறியது சாத்விக் – சிராக் ஜோடி: வெளியேறினார் எச்.எஸ்.பிரணாய்

ஷென்சென்: சீனா மாஸ்டர்ஸ் சூப்பர் 750 பேட்மின்டன் தொடரின் ஆண்கள் இரட்டையர் பிரிவு அரையிறுதியில் விளையாட, இந்தியாவின் சாத்விக்சாய்ராஜ் ராங்கிரெட்டி – சிராக் ஷெட்டி இணை தகுதி பெற்றது. காலிறுதியில் இந்தோனேசியாவின் லியோ ரோலி கர்நாண்டோ – டேனியல் மார்தின் இணையுடன் மோதிய சாத்விக் – சிராக் இணை 21-16, 21-14 என நேர் செட்களில் அபாரமாக வென்று அரையிறுதிக்கு முன்னேறியது. விறுவிறுப்பான இப்போட்டி 46 நிமிடங்களுக்கு நீடித்தது. நடப்பு சீசனில் சாத்விக் – சிராக் ஜோடி இந்தோனேசியா சூப்பர் 1000, கொரியா சூப்பர் 500 மற்றும் சுவிஸ் சூப்பர் 300 தொடர்களில் சாம்பியன் பட்டம் வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது. சீனாவின் ஹி ஜி டிங் – ரென் ஜியாங் யு மற்றும் லியு யு சென் – ஓவ் ஜுவான் யி ஜோடிகளிடையே நடக்கும் மற்றொரு காலிறுதியில் வெற்றி பெறும் ஜோடியுடன் அரையிறுதியில் இந்திய இணை மோதவுள்ளது. ஆண்கள் ஒற்றையர் பிரிவு காலிறுதியில் களமிறங்கிய இந்திய நட்சத்திரம் எச்.எஸ்.பிரணாய் (31 வயது, 8வது ரேங்க்) 9-21, 14-21 என்ற நேர் செட்களில் ஜப்பானின் கோடய் நரோகாவிடம் (22 வயது, 5வது ரேங்க்) போராடி தோற்று ஏமாற்றத்துடன் வெளியேறினார்.

The post சீனா மாஸ்டர்ஸ் பேட்மின்டன் அரையிறுதிக்கு முன்னேறியது சாத்விக் – சிராக் ஜோடி: வெளியேறினார் எச்.எஸ்.பிரணாய் appeared first on Dinakaran.

Tags : China Masters Badminton ,-finals ,Chadwick ,Chirag ,HS Pranai ,Shenzhen ,China Masters Super 750 Badminton Series Men's Doubles ,India ,Satviksairaj Rangritty ,China Masters Badminton Semi-Finals ,Satvik ,Dinakaran ,
× RELATED உலக சாம்பியன் பைனலுக்கு தேர்வான குகேசுக்கு உற்சாக வரவேற்பு