×

தஞ்சாவூர் மாநகராட்சி திரையரங்கம் பயன்பாட்டிற்கு திறக்க நடவடிக்கை: மேயர் ஆய்வு

 

தஞ்சாவூர், நவ.25: தஞ்சாவூர் அண்ணா சாலையில் உள்ள மாநகராட்சிக்குட்பட்ட திரையரங்கத்தை மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வருவதற்காக நேற்று மேயர் சண்.ராமநாதன் பார்வையிட்டு ஆய்வு செய்தார். தஞ்சாவூர் அண்ணா சாலையில் உள்ள மாநகராட்சிக்குட்பட்ட திரையரங்கத்தை மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர மேயர் சண்.ராமநாதன் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

மாநகராட்சி மேயர் சண்.ராமநாதன் மற்றும் மாநகராட்சி ஆணையர் மகேஸ்வரி செயற்பொறியாளர், கட்டிட ஆய்வாளர், உதவி செயற்பொறியாளர் ஆகியோருடன் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். திரையரங்கம் வெகு விரைவில் மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வர தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக வருகிறது.

The post தஞ்சாவூர் மாநகராட்சி திரையரங்கம் பயன்பாட்டிற்கு திறக்க நடவடிக்கை: மேயர் ஆய்வு appeared first on Dinakaran.

Tags : Thanjavur Municipal Corporation ,Thanjavur ,Anna Road ,
× RELATED தஞ்சாவூர் மாநகராட்சி குப்பை கிடங்கில் தீ விபத்து