×

டெல்லியில் ஆப்கானிஸ்தான் தூதரகம் நிரந்தரமாக மூடல்

புதுடெல்லி: டெல்லியில் இருந்த ஆப்கானிஸ்தான் தூதரகம் நிரந்தரமாக மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் ஆட்சிக்கு வந்தபின்னர் பெரும் மாற்றங்களை மேற்கொண்டு வருகின்றனர். இதில் தூதரகங்களை மூடும் நடவடிக்கையும் ஒன்றாகும். தலிபான்கள் ஆட்சிக்கு பல்வேறு நாடுகள் அங்கீகாரம் வழங்காத நிலையில் தூதரகங்களை தலிபான் அரசு மூடிவருகின்றது. அக்டோபர் 1ம் தேதி முதல் டெல்லியில் உள்ள ஆப்கானிஸ்தான் தூதரகம் தனது செயல்பாடுகளை நிறுத்துவதாக செப்டம்பர் 30ம் தேதி ஏற்கனவே அறிவித்து இருந்தது. ஆனால், அப்போது தூதரகம் மூடப்படவில்லை.

இந்நிலையில் கடந்த 23ம் தேதி முதல் டெல்லியில் உள்ள தூதரகத்தை நிரந்தரமாக மூடிவிட்டதாக ஆப்கானிஸ்தான் அரசு அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. இது குறித்து ஆப்கானிஸ்தான் தூதரகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், 8 வாரங்கள் காத்திருந்தபோதிலும் தூதரக அதிகாரிகளுக்கான விசா நீட்டிப்பு மற்றும் இந்திய அரசின் நடத்தையில் மாற்றம் ஏற்படவில்லை. தலிபான்கள் மற்றும் இந்திய அரசின் தரப்பில் இருந்தும் அழுத்தம் கொடுக்கப்பட்டதால் தூதரகம் கடினமான தருணங்களை எதிர்கொண்டு வந்த நிலையில் தற்போது நிரந்தரமாக மூடப்பட்டுள்ளது” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

The post டெல்லியில் ஆப்கானிஸ்தான் தூதரகம் நிரந்தரமாக மூடல் appeared first on Dinakaran.

Tags : Afghan Embassy ,Delhi ,New Delhi ,Taliban ,Afghanistan ,Dinakaran ,
× RELATED மனைவியின் சீதனம் கணவருக்கு உரிமையில்லை: உச்சநீதிமன்றம் உத்தரவு