×

கால்வாயில் கழிவுநீர் கொட்டப்படுகிறதா? விசாரணைக்கு உத்தரவு

 

மதுரை, நவ. 25: மதுரை மாநகராட்சி பகுதிகளில் உள்ள குடியிருப்புகள், அலுவலகங்கள், தொழில் நிறுவனங்களின் கழிவுகளை அகற்ற ஒப்பந்த லாரிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. இதற்காக டெண்டர் விடப்பட்டு அந்த லாரிகள் மூலமாக கழிவுகள் அள்ளப்பட்டு வருகின்றது. இதற்கிடையே, மதுரை செல்லூர் பகுதியில் மழை காரணமாக பாதாள சாக்கடை குழாய்களில் உடைப்பு ஏற்பட்டு, சாலைகளில் மனித கழிவோடு ஓடிய கழிவுநீரை உறிஞ்சும் வாகனம் மூலம் எடுத்து, அதே பகுதியில் உள்ள மழைநீர் வடிகால் மூலமாக பந்தல்குடி கால்வாயில் கொட்டிச்சென்றதாக மற்றொரு புகார் எழுந்துள்ளது.

பொதுவாக வாகனங்களில் மாநகராட்சி ஒப்பந்த வாகனங்களில் உறிஞ்சி எடுக்கப்படும் கழிவுநீரை சுத்திகரிப்பு நிலையங்களில் சேர்க்க வேண்டும். இந்த விதியை மீறி கால்வாயில் கழிவுநீர் கொட்டியதாக எழுந்த புகாரின் பேரில் மாநகராட்சி அதிகாரிகள் விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளனர். விதிமீறல்களில் ஈடுபடும் கழிவுநீரேற்று வாகன ஒப்பந்ததாரர்கள் மீது நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனவும் அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.

The post கால்வாயில் கழிவுநீர் கொட்டப்படுகிறதா? விசாரணைக்கு உத்தரவு appeared first on Dinakaran.

Tags : Madurai ,Madurai Corporation ,Dinakaran ,
× RELATED மாநகராட்சி பள்ளிகளில் ஆசிரியர் பணியிடங்கள்