×

வங்கிகளுக்கு ரூ.10.34 கோடி அபராதம்

மும்பை: விதிகளை மீறியதற்காக சிட்டி வங்கி, பாங்க் ஆப் பரோடா மற்றும் ஐஓபி ஆகியவற்றுக்கு ரிசர்வ் வங்கி மொத்தம் ரூ.10.34 கோடி அபராதம் விதித்துள்ளது. வங்கிகளுக்கான விதிமுறைகளை கடைப்பிடிக்காததற்காக சிட்டி வங்கி, பாங்க் ஆப் பரோடா, ஐஓபி ஆகியவற்றுக்கு ரிசர்வ் வங்கி அபராதம் விதித்துள்ளது. இதில் அதிகபட்சமாக சிட்டி வங்கிக்கு ரூ.5 கோடி விதிக்கப்பட்டுள்ளது. டெபாசிட் தாரர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்ற விதிமுறையை கடைப்பிடிக்காததற்காக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதுபோல், பெரிய அளவில் கடன்களை திருப்பிச் செலுத்தாதவர்கள் விவரங்களை தொகுத்து வைக்காததற்காக பாங்க் ஆப் பரோடாவுக்கு ரூ.4.34 கோடி அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. கடன்கள் தொடர்பாக ரிசர்வ் வங்கி விதித்த விதிகளை மீறியதற்காக இந்தியன் ஓவர் சீஸ் வங்கிக்கு (ஐஓபி) ரூ.1 கோடி என மொத்தம் ரூ.10.34 கோடி அபராதம் விதிக்கப்பட்டள்ளதாக ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.

The post வங்கிகளுக்கு ரூ.10.34 கோடி அபராதம் appeared first on Dinakaran.

Tags : Banks ,Mumbai ,RBI ,Citibank ,Bank of Baroda ,IOP ,Dinakaran ,
× RELATED புதிய கிரெடிட் கார்டு வழங்கக் கூடாது...