×

பங்குச்சந்தை ஏற்ற, இறக்கம் செபி என்ன செய்ய போகிறது? உச்ச நீதிமன்றம் சரமாரி கேள்வி

புதுடெல்லி: அதானி குழும மோசடி குறித்த ஹிண்டன்பர்க் அறிக்கை குறித்த சர்ச்சையால் பங்குச் சந்தையில் அதானியின் பங்குகள் தொடர்ந்து ஏறுவதும், இறங்குவதும் நீடிக்கிறது. அதானி குழும மோசடி குறித்து விசாரிக்க உச்ச நீதிமன்ற ஒய்வு பெற்ற நீதிபதி தலைமையில் குழு அமைக்கப்பட்டு விசாரிக்கப்பட்டு வருகிறது. நேற்று இதுதொடர்பான வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திர சூட், நீதிபதிகள் ஜே.பி.பர்திவாலா, மனோஜ் மிஸ்ரா ஆகியோர் அடங்கிய அமர்வு, “பங்குச் சந்தை விவகாரங்களில் உச்ச நீதிமன்றம் தலையிட அதானி மோசடி வழக்கே காரணம். எதிர்காலத்தில் இதுபோன்ற நிகழ்வுகளை தடுக்க செபி என்ன நடவடிக்கை எடுக்க போகிறது? சந்தையில் ஏற்படும், ஏற்ற, இறக்கத்தை விசாரிக்க செபி என்ன செய்தது? முதலீட்டாளர்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் செபி என்ன செய்ய போகிறது? என அடுக்கடுக்கான கேள்விகளை எழுப்பி தீர்ப்பை ஒத்திவைத்தனர்.

The post பங்குச்சந்தை ஏற்ற, இறக்கம் செபி என்ன செய்ய போகிறது? உச்ச நீதிமன்றம் சரமாரி கேள்வி appeared first on Dinakaran.

Tags : SEBI ,Supreme Court ,New Delhi ,Hindenburg ,Adani Group ,Adani ,Dinakaran ,
× RELATED அதானி நிறுவன மோசடி குறித்த செபி...