×

அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு மைதானம் ஜனவரியில் திறப்பு

அலங்காநல்லூர்: அலங்காநல்லூர் அருகே உள்ள கீழக்கரை கிராமத்தில் 66 ஏக்கர் பரப்பளவில் ரூ.44.60 கோடி செலவில் தமிழர்களின் வீர விளையாட்டின் அடையாளமான ஜல்லிக்கட்டுக்கு பிரமாண்ட மைதான அரங்கம் அமைக்கும் பணிதற்போது 80 சதவீத நிறைவு பெற்றுள்ளன. இந்நிலையில் கட்டுமான பணிகளை அமைச்சர்கள் எ.வ.வேலு. பி.மூர்த்தி ஆகியோர் நேற்று பார்வையிட்டு ஆய்வு செய்தனர். அங்கு செய்யப்பட்டு வரும் பல்வேறு வசதிகள் குறித்து கேட்டறிந்தனர். அரண்மனை போன்ற வடிவமைப்பில் மைதானத்தில் பணிகள் நடைபெறுகிறது. இந்த மைதானத்தில் அமைக்கப்படும் வாடிவாசல் பாரம்பரியம் பழமை மாறாத வகையில் மிகப் பிரமாண்டமான முறையில் அமைக்கப்பட வேண்டும் என்று அதிகாரிகளை அமைச்சர்கள் கேட்டுக் கொண்டனர். குறிப்பிட்ட நாளில் பணிகள் முடிக்கப்பட வேண்டும் என்றும் கட்டுமான நிறுவன அதிகாரிகளிடம் கூறினர். ஜனவரி மாத முதல் வாரத்தில் மைதான அரங்கம் திறக்க திட்டமிடப்பட்டுள்ளதாக அரசு அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. மைதானத்திற்கு வாகனங்கள் வந்து செல்ல புதிதாக ரூ.22 கோடியில் சாலை அமைக்கப்பட்டு வருகிறது.

The post அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு மைதானம் ஜனவரியில் திறப்பு appeared first on Dinakaran.

Tags : Alankanallur Jallikattu stadium ,Alankanallur ,Tamils ,Geezakarai ,jallikattu ,Dinakaran ,
× RELATED அரசு பள்ளியில் முன்னாள் மாணவர்கள் சந்திப்பு