×

கே.எஸ்.அழகிரி அறிக்கை மோடியை மக்கள் ஏற்க மாட்டார்கள்

சென்னை: தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி வெளியிட்ட அறிக்கை: இந்தியாவின் தனிநபர் வருமான வளர்ச்சி 5 டிரில்லியன் டாலரை நோக்கியதாக இருக்கிறதா? இதுவரை இதுகுறித்த அரசின் அதிகாரப்பூர்வ மதிப்பீடு ஏதும் வெளியாகவில்லை. இந்நிலையில் மோடியின் கனவு கேள்விக்குறியாகவே இருக்க முடியும். ஆனால், அதற்குள்ளாக சமூக ஊடகத்தில் தவறான புள்ளி விவரத்தின் அடிப்படையில் 4 டிரில்லியன் டாலர் பொருளாதார வளர்ச்சி அடைந்து விட்டதாக செய்திகள் பரப்பப்பட்டது. இதன்மூலம் 5 மாநில தேர்தல்களில் வாக்காளர்களை ஏமாற்றி விடலாம் என்று பாஜ பகல் கனவு காண்கிறது.

விநியோகம் அல்லது சமத்துவமற்ற குறியீட்டின் அடிப்படையில் மட்டுமே 5 டிரில்லியன் டாலர் பொருளாதாரத்தை அடைய முடியும். 5 டிரில்லியன் டாலர் பொருளாதாரத்தால் ஏழைகள், பணக்காரர்கள் என்று இந்தியா இரண்டாகப் பிளவுபடுமா? பெரும்பாலான மக்கள் இன்னும் வளர்ச்சிப் பாதையில் இணைக்கப்படாமலேயே மோடி ஆட்சி நடந்து வருகிறது. வளர்ச்சியில் சமநிலைத்தன்மை இல்லை. மோடி ஆட்சி என்பது யாருக்காக நடைபெறுகிறது என்பதை மேற்கண்ட புள்ளி விவரங்கள் தெளிவுபடுத்துகின்றன. வளர்ச்சியின் கதாநாயகனாக மோடி தன்னை முன்னிலைப்படுத்துவதை நாட்டு மக்கள் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள்.

The post கே.எஸ்.அழகிரி அறிக்கை மோடியை மக்கள் ஏற்க மாட்டார்கள் appeared first on Dinakaran.

Tags : KS Alagiri ,Modi ,Chennai ,Tamil Nadu Congress ,President ,KS Azhagiri ,India ,Dinakaran ,
× RELATED சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் 42...