×

மண்டல் கமிஷன் அறிக்கையை காங்கிரஸ் செயல்படுத்தவில்லை: தெலங்கானாவில் மாயாவதி பேச்சு


ஐதராபாத்: மண்டல் கமிஷன் அறிக்கையை காங்கிரஸ் செயல்படுத்தவில்லை என்று தெலங்கானாவில் மாயாவதி பேசினார். தெலங்கானாவில் வரும் 30ம் தேதி சட்டப் பேரவை தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் பெத்தபள்ளியில் நடந்த பேரணியில் பகுஜன் சமாஜ்வாதி கட்சி மாயாவதி பங்கேற்றார். அப்போது அவர் பேசுகையில், ‘ஜாதிவாரி கணக்கெடுப்பை நடத்த தற்போது காங்கிரஸ் கட்சி கோருகிறது. கடந்த காலங்களில் காங்கிரஸ் கட்சி ஆட்சியில் இருந்த போது, எஸ்சி – எஸ்டி, ஓபிசி பிரிவினர்களுக்கு இடஒதுக்கீடு வழங்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது.

அதனை காங்கிரஸ் ஏற்கவில்லை. மண்டல் கமிஷன் அறிக்கையை காங்கிரஸ் செயல்படுத்தவில்லை. மண்டல் கமிஷன் அறிக்கையை அமல்படுத்தக் கோரி எங்களது கட்சி பல்வேறு போராட்டங்களை நடத்தியது. ஆனால் காங்கிரஸ் எங்களது கோரிக்கையை ஏற்கவில்லை. நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட மகளிர் இடஒதுக்கீடு மசோதாவில், எஸ்சி, எஸ்டி, ஓபிசி பிரிவினருக்கு தனி இடஒதுக்கீடு வழங்கவில்லை. தெலங்கானாவில் உள்ள பிஆர்எஸ் அரசு, தலித்களுக்கு எதிரானது’ என்றார்.

The post மண்டல் கமிஷன் அறிக்கையை காங்கிரஸ் செயல்படுத்தவில்லை: தெலங்கானாவில் மாயாவதி பேச்சு appeared first on Dinakaran.

Tags : Congress ,Mayawati ,Telangana ,Hyderabad ,Dinakaran ,
× RELATED நெல்லை காங்கிரஸ் தலைவர் ஜெயக்குமார்...